முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியருக்கு மரண தண்டனை விதிப்பு

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லமபாத்  - பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக பிடிபட்ட இந்தியரான குல்பூஷன் யாதவ் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உளவு பார்த்தவர்
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு ஈரான் வழியாக சென்றதாக குல்பூஷன் யாதவ் என்ற இந்தியரை கடந்த ஆண்டு  பாகிஸ்தான் கைது செய்தது. இவர் இந்திய உளவாளி எனவும், இந்திய கடற்படையில் கமாண்டர் அந்தஸ்து கொண்ட அதிகாரி  என்றும் பாகிஸ்தான் கூறியது. குல்பூஷன்யாதவ் கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றதை ஒப்புக்கொண்ட இந்தியா,  ’ரா’ உளவு அமைப்புக்காக உளவு பார்த்தவர் என்பதை  ஏற்கனவே திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

மரண தண்டனை
இந்த நிலையில், குல்பூஷன் யாதவிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம், குல்பூஷன் யாதவின் ஒப்புதல் வாக்கு மூலம் என்ற பெயரில் பாகிஸ்தான் வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோவில் இந்தியா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை பாகிஸ்தான் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்