முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணா பொறியியல் மாணவர்கள் சாதனை: காற்றில்இயங்கும் வாகனம்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர்கள் காற்றினால் இயங்கும் வாகனம் ஒன்றை தயாரித்து சாதனை படைத்தனர். அவர்களை கல்லூரி சேர்மன், செயலாளர் பாராட்டினார்கள். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லையில் கிருஷ்ணா பொறியியல் கல்லூரி அமைந்து உள்ளது. இந்த கல்லூhயில் படிக்கின்ற மாணவர்கள் வி.ராஜேஷ்குமார், பி.ஹேமந்த்குமார், ஜெ.மகேஷ், ஆர்.பிரேம்குமார் ஆகியோர் பேராசிரியர் சுதாகர் வழிகாட்டுதலின் பேரில் கூட்டாக கண்டுபிடித்த காற்றினால் மட்டுமே இயங்க கூடிய வாகனம் வெள்ளோட்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கல்லூரி சேர்மன் டிஆர்.சுப்பிரமணியம், செயலாளர் டிஆர்எஸ்.ரவிக்குமார், மற்றும் இயக்குனர் சாம்பமூர்த்தி, கல்லூரி அலுவலக உதவியாளர் கோபிநாத், மெடரிக் பள்ளி முதல்வர் தாமோதரன், ஆகியோர் கலந்து கொண்டனர். முற்றிலும் காற்று அடைக்கபட்ட டேங்கர் ஒன்றின் மூலமாக இயக்கபடும் இந்த நான்கு சக்கர வாகனம் 30கிமீ வேகத்தில் 250கிலோ எடை கொண்ட மூன்று நபர்களுடன் செயல்படும். இது போன்ற வாகனங்களால் வருங்காலங்களில் சுற்று சூழல் மாசுபடுவதை கட்டுபடுத்தலாம், அத்துடன் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொள்ளவும் ஏதுவாக இருக்கும் என மாணவர்கள் விளக்கமளித்தனர். மாணவர்களின் புதிய கண்டுபிடிப்பை கல்லூரி சேர்மன் டிஆர்.சுப்பிரமணியம், செயலாளர் டிஆர்எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்