முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்ன வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூ.2.59 கோடி கடனுதவி: கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (10.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமையேற்று பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார்.இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை வேண்டியும், குடிசை மாற்று வாரியத்தில் வீடு வேண்டியும், புதிய குடும்ப அட்;டைகள் வேண்டியும், குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 449 மனுக்கள் வரப்பெற்றன. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும்; திட்டத்தின் கீழ் 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ.2,58,78,092 மதிப்பீட்டில் கடனுதவி பெற்று சுயதொழில் புரிந்து வரும் 69 பயனாளிகளுக்கு ரூ.63.00 இலட்சம் மானிய நிதியுதவியினையும், எதிர்பாரதவிதமாக சாலை விபத்தில் மரணமடைந்த 2 நபர்களின் குடும்பத்தாருக்கு நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் சார்பில் தலா ரூ.1.00 இலட்சம் வீதம் ரூ.2.00 இலட்சம் விபத்து நிவாரண நிதியுதவிக்கான காசோலைகளையும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட 9 குழந்தைகளுக்கு ரூ.42,300 மதிப்பிலான காதொலிக்கருவி உள்ளிட்ட உதவி உபகரணங்களையும், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பெண்கல்வி, இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டம், தூய்மை பாரதம் சார்ந்த மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற 7 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.12,600 ரொக்கப்பரிசுத்தொகைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2015-16-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற முள்ளுக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளி மாணவி எம்.அபிராமிக்கு ரூ.20,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழையும் என 88 பயனாளிகளுக்கு ரூ.65,74,900 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.10,000 வங்கிக்கடன் மானிய நிதியுதவியினையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000 மதிப்பிலான காதொலிக்கருவிகளையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14,000 மதிப்பிலான இலவச பேருந்து பயண அட்டைகளையும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டைகளையும் என மொத்தம் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 116 பயனாளிகளுக்கு ரூ.66,01,900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மானிய நிதியுதவி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மு.ஆசியா மரியம் வழங்கினார்.இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.பழனிசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) நா.பாலச்சந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ராஜு, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் க.சுப்ரமணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கே.எஸ்.முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் (கலால்) புகழேந்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அசோகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் டி.கே.ராஜேஸ்வரி, அனைவருக்கும் கல்வி இயக்க பணியாளர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்