முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதி அரேபியாவில் இனி வருமான வரி கிடையாது

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

ரியாத்  - சவுதி அரேபியா மக்களுக்கு இனி வருமான வரி கிடையாது என அந்நாட்டின் நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

கடும் நெருக்கடி
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடந்த 2014ல் கடுமையான மாற்றம் வந்தது. கடும் சரிவை சந்தித்த அந்த தருணத்தில் சவுதியின் பொருளாதார சூழலில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் புதிய வரி விதிப்பில் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் பல விதமான புதிய வரிகள் அறிமுகப் படுத்தப்பட்டன.

வரி கிடையாது
இந்நிலையில், நேற்று சவுதி அரேபியாவின் நிதி துறை அமைச்சர் அல் ஜதான் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், சவுதி அரேபியாவில் வசிக்கும் சவுதிக் குடிமக்களுக்கும், சவுதியில் செயல்படும் நிறுவனங்களுக்கும் வரி கிடையாது என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்