முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க வேலையை உதறி விட்டு 'டீ' கடையை திறந்த ஐ.ஐ.டி மாணவர்கள்

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

மும்பை  - இன்றைய இளைஞர்களுக்கு இருக்கும் ஒரே கனவு அமெரிக்காவில் வேலை என்பது தான். ஆனால் இந்த இரண்டு ஐ.ஐ.டி மாணவர்கள் அமெரிக்காவில் அதிகம் சம்பளம் கிடைக்கும் உயரிய வேலையை விடுத்து இப்போது இந்தியாவில் "சாயோஸ்" 'Chaayos' என்ற ஒரு டீ கடையை திறந்துள்ளனர். தற்போது இவர்கள் இந்தியாவில் கூர்கான், நொய்டா, டெல்லி, மும்பை என இந்தியாவில் 5 இடங்களில் கடைகளை திறந்துள்ளனர். மேலும் இவர்கள் இந்தியாவின் முக்கியமான நகரங்களில் 1,000 கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக நிதியை திரட்ட இந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.

முதலீடுக்கு  நிதி திரட்டப்படும்
அதுகுறித்து இந்நிறுவனத்தின் நிறுவனரான நித்தின் சலுஜா கூறுகையில் "நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக ஏன்ஞல் இண்வெஸ்ட்மென்ட் நிறுவனத்திலிருந்து முதற்கட்டமாக 2 கோடி ரூபாய் பெற்றுள்ளோம்" என்று அவர் தெரிவித்தார்.

இளைஞர்களே எங்களது டார்கெட்
மேலும் அவர் அடுத்த 2 வருடங்களில் என்சிஆர் பகுதிகளில் 50 கடைகள் வரை திறப்பதே எங்களின் முக்கிய குறிக்கோள், அதை தொடர்ந்து இந்தியாவின் தலைமையான டெல்லியில் எங்கள் கடைகளை பரப்புவது என அவர் தெரிவித்தார். அதுமட்டும் இல்லாமல் எங்களின் டார்கெட் இளைஞர்கள் தான் எனவும் அவர் அழுத்தமாக தெரிவித்தார். இந்த நிறுவனம் மட்டும் அல்ல கடந்த சில வருடங்களாக இந்தியாவில் துவங்கிய அனைத்து நிறுவனங்களும் இளைஞர்களை மட்டுமே குறிவைத்து துவங்கப்பட்டது. அதிலும் முக்கியமாக சிசிடி, பாஸ்ட்டிராக், ஆன்லைன் ஷாப்பிங், மால்கள், பன்நாட்டு தின்பண்ட நிறுவனங்கள், மற்றும் பல..

சாயோஸ
இந்த நிறுவனத்தை துவங்கிய சலுஜா ஐ.ஐ.டி பாம்போ கல்லூரியில் பட்ட படிப்பை முடித்தார், இந்நிறுவனத்தின துணை நிறுவனரான் ராகவ் வர்மா ஐ.ஐ.டி டெல்லியில் பட்ட படிப்பை முடித்தவர்.

12,000 வகையான காஃப
இக்கடையில்  எக்ஸ்பிரிமண்ட் விட் சாய்  என்ற பெயரில் வாடிக்கையாளர் தங்களுக்கு ஏற்றவாறு சுமார் 12,000 வகைகளில் காபியை குடிக்கலாம். இதுவே இக்கடையின் முக்கிய அம்சம்.

டீ மற்றும் ஸ்நாக்ஸ
இக்கடைகளில் காபி மட்டும் அல்லாமல் 25 டீ வகைகளும், பல வகையான ஸ்நாக்ஸ் வகைகளும் வாடிக்காயாளர்களுக்கு அளிக்கப்படுகிறது, இதனால் வாடிக்காயாளர் விரும்பும் அனைத்து வகையான டீ மற்றும் காஃபி வகைகளும் எங்களால் கொடுக்க முடியும் என் ராகவ் வர்மா கூறினார்.அடுத்த சில வருடங்களில் சாயோஸ் இந்தியாவில் 1,000 கடைகள் உருவாக்க வேண்டும் என்பதே எங்களது கனவு என இருவரும் தெரவித்தனர். மேலும் இந்தியாவில் டீ மற்றும் காஃபிகளுக்கும் எப்போதுமே வரவேற்பு அதிகம், அதை உணர்ந்த இவர்களின் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்