ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் வனப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் வனத்துறையினர் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 10 ஏப்ரல் 2017      கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் ஒற்றை யானையுடன் மேலும் 2 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் வனப்பகுதியில் சுற்றி வருவதால் யாரும் வனப்பகதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு கடந்த 6 மாதமாக நு£ற்றுக்கம் மேற்பட்ட காட்டு யானைகள் வந்த வண்ணம் இருந்தன. இதில் ஒரு சில யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டு வனப்பகுதியையட்டியுள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 யானைகள்,ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு யானை என தற்போது 3 யானைகள் சானமாவு வனப்பகுதியில் உள்ளன. இந்த யானைகள் கோபசந்திரம்,போடூர்,சானமாவு,ராமாபுரம் பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்து வருகின்றன.யானைகள் வெய்யில் காலம் என்பதால் போடுர் பள்ளத்திலும்,அவ்வப்போது தென்பெண்ணை நதிக்கும் வருவது வழக்கமாக கொண்டுள்ளன. யானைகள் முகாமிட்டுருப்பதால் கால் நடைகள் மேய்க்க யாரும் செல்ல வேண்டாம். மேலும் வனத்தையட்டியுள்ள விவசாய நிலத்தில் காலை,மாலை நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.யானைகள் ஓசூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளை நன்கு அறிந்திருப்பதால் யானைகளை விரட்டினாலும் செல்லுவதில்லை. விரட்டிய வேகத்திலேயே வந்து விடுகின்றன. இந்த யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டி பின் கர்நாடக மாநிலம் பன்னேர்கட்டா வனப்பகுதிக்கு விரட்ட வனத்தறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: