முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறையான பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத தீப்பெட்டி மற்றம் வெடிமருந்து தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் நீலோபர் கபில் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பலமனேரி ரோடு மீனாம்பால்புதூர் கிராமத்தில் இயங்கி வந்த சூர்யா தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட எதிர்பாராத தீவிபத்தில் காயமடைந்த 17 தொழிலாளர்கள் காட்பாடி சில்க்மில் குமரன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீக்காயமடைந்தவர்களை தொழிலாளர் நலத்துறை அமைச்சர்;.நிலோபர் கபீல் அவர்களும், கலெக்டர் சி.அ.ராமன், இ.ஆ.ப., அவர்களும் பார்வையிட்டு அவர்களிடம் தீக்காயங்கள் குறித்து அதிகம் பயப்படவேண்டாம். மருத்துவர்கள் தொடர்ந்து உங்களுக்கு தரமான சிகிச்சை அளிப்பார்கள். மேலும் ஏதேனும் அவசரம் என்றாலும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க உத்திரவிட்டுள்ளேன். எனவே நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆறுதல் கூறினார்கள். பின்னர் மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.சேந்தன் காயமடைந்தவர்களுக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் அவர்களிடம் தெரிவித்ததாவது:-தீ விபத்தில் மொத்தம் 17 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில் லதா ரகு, அம்சவேணி ஜெயவேலு ஆகிய இருவருக்கு 40 சதவிதத்திற்கும் மேல் உடம்பில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜெயந்தி முனிவேல், கோட்டி என்பவர்கள் 30 சதவிகிதம் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் தீவிர சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் முகூர்த்தம் துரைசாமி, பேபி சுப்பிரமணி, உஷாரவி, ராஜேஸ்வரி பெருமாள், செல்வி.காயத்ரி கங்காதரன், ஈஸ்வரிவேலு, சசிகலா வீராசாமி, சாவித்திரி கிருஷ்ணன், சுதா அசோக்குமார், ரமணி சுப்பிரமணி மற்றும் செல்வி.சங்கீதா பாண்டு ஆகிய இவர்களுக்கு 30 சதவிகிதம்; மற்றும் அதற்கு குறைவாக காயம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கும் பாதுகாப்பான சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. பாதிப்பு குறைவானவர்கள் இந்த வார இறுதிக்குள் வீட்டுக்கு அனுப்படுவார்கள் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் அவர்களிடம் விவரித்தார்.இதனை தொடர்ந்து விபத்து ஏற்பட்ட குடியாத்தம் சூர்யா தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சென்று விபத்து நடந்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விபத்து எவ்வாறு நடந்தது என்று கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் அவர்கள் தெரிவித்ததாவது:வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் சூர்யா தீப்பெட்டி தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 17 பேர் தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்பட்டுள்ளனர். இவர்களில் 2 நபர்கள் மட்டும் அதிக காயத்திற்குள்ளாகி உள்ளனர். மற்றவர்களுக்கு அபாய கட்டத்தை விட குறைந்த அளவில் காயம் ஏற்பட்டள்ளது. இவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்திரவிட்டுள்ளேன். மேலும் நமது மாவட்டத்தில் இயங்கி வரும் தீப்பெட்டி மற்றும் வெடிமருந்து தொழிற்சாலைகளில் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு முறைகள் இந்த தொழிற்சாலைகளில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தொழிலக பாதுகாப்பு இயக்குநர் மூலம் வேலூர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் தொழிற்சாலை பாதுகாப்பு ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு முறைகளை பின்பற்றாத தொழிற்நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளது. இதனால் இதுபோன்ற தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் பணி பாதுகாப்புகள் குறித்து அரசு தெரிவிக்கும் விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி இதுபோன்ற பெறும் விபத்துகள் நேரிடாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது தொழிலக பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரம் இயக்குநர் பி.போஸ், கூடுதல் இயக்குநர் முரளிதரன், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.ஜி.பார்த்திபன், ஜி.லோகநாதன், ஜெயந்தி பத்மநாபன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அஜய்சீனிவாசன், இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மரு.கலிவர்தன், தொழிற்சாலைகள் பாதுகாப்பு இணை இயக்குநர்கள் முகமதுகனி, பெரியசாமி, வட்டாட்சியர்கள் ஜெகதீஸ்வரன், நாகம்மா, குமரன், தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் மரு.சேந்தன், மரு.சுனிதா, மாவட்ட தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் மகாலிங்கம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்