முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் வறட்சியின் காரணத்தினால் கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படுவது குறித்து கலந்தாய்வு கூட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்டம், வேளாண்மை இணை இயக்குநர் அவர்களின் கூட்டரங்கில் தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணத்தினால் கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவது குறித்து கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர், கே. விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :-நமது மாவட்டத்தில் வறட்சியினை தாங்கி வளரக்கூடிய புரதச்சத்து மிக்க ‘தகரை’ எனும் சூபாபுல் செடிகளை விவசாயிகளிடையே விரிவாக கொண்டு செல்ல வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறையினருடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. தற்போது அனைத்து ஏரிகளில் கருவேல முள் செடிகளை அகற்றப்பட்டு வரும் நிலையில், கரையோரங்களில் சூபாபுல் செடிகளை வைக்கவும், கல்லூரி வளாகங்களில் ஒரு பகுதியில் இம்மரங்களை வளர்த்து, தழைகளை கால்நடை பராமரிக்கும் விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கால்நடைகளுக்கு அசோலா வளர்க்கவும் தொழில்நுட்ப உதவிகளும், முனைப்பாரி அமைத்து குறுகிய நாளில் கால்நடைகளுக்கு பசுந்தீவனம் வழங்கவும், மேலும் நமது மாவட்டத்தில் 10 எண்கள் மானாவாரி தொகுப்பு நில மேம்பாட்டு திட்டத்தில் 10,000 ஹெக்டர் நிலப்பரப்பில் விவசாயிகள் இணைக்கப்பட்டு, அவர்களது விளைச்சலை அதிகப்படுத்த மண் ஈரத்தை பாதுகாக்கும் விதமாக கோடை உழவு, பண்ணைக்குட்டை அமைக்கவும், மான்யத்தில் விதைகள், உரங்கள், பயிர்பாதுகாப்பு மருந்துகளுடன், விவசாய உபகரனங்களும் வழங்கப்பட உள்ளதாகவும், மேலும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு சமுதாய கிணறு அமைக்கவும், சூரிய ஒளியில் இயங்கும் நீர் இறைக்கும் மின் மோட்டாரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் மாவட்ட சமச்சீர் நிதியிலிருந்து வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேவைப்படும் கருவிகள் மான்ய விலையில் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒருங்கிணைந்த கலப்பு பண்ணையம், மஞ்சள் இலையிலிருந்து எண்ணை எடுத்தல், தென்னை மரம் ஏறும் கரும்பு, மஞ்சள் பதப்படுத்தும் பாய்லர், மினி டிராக்டர், நீர் சேமிக்க மேல்மட்ட தொட்டி, சொட்டுநீர் பாசன கருவிகளை தூய்மைபடுத்த மகளீர் குழு மூலம் ஏற்பாடு செய்தல், போன்ற கருத்துக்கள் மூலம் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்டு, வட்டாரத்திலுள்ள அனைத்து துறையினருடனும் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் கே.விவேகானந்தன், தெரிவித்தார்.இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் திருமதி ரா.ரா. சுசீலா, வேளாண்மை துணை இயக்குநர் திரு உதயகுமார், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு அண்ணாமலை, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் லோகநாதன் மற்றும் திட்ட இயக்குநர் (மகளீர் திட்டம்) ஆர்த்தி உட்பட துறை ரீதியான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்