முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடி முன்னாள் மாணவர் மனு ஜெய்ஸ்வால் எழுதிய பண்டைய தமிழ்நாட்டு கட்டிட கலை பற்றிய நூல்: வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார்

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வரும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை பற்றிய விஐடி பல்கலைகழகத்தில் பி.டெக் இயந்திரவியல் படித்த முன்னாள் மாணவர் ஜெய்ஸ்வால் ஆங்கில நூல் ஒன்று எழுதியுள்ளார். பண்டைய தமிழ்நாட்டு கட்டிடக்கலை என்ற அந்த நூலினை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார்.பண்டைய தமிழ்நாட்டின் வரலாற்றை அறியும் போது அக்காலத்தில் தமிழ் மக்களின் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு மற்றும் அதனுடன் இணைந்த கட்டிடக் கலையின் சிறப்புகளை அறிய முடிகிறது. நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் புதிய தொழில் நுட்பத்தின் மூலமாக் நீர் ஆதாரங்கங்கள் எப்படி பாதுகாப்பது எப்படி உருவாக்குவதின் அவசியம் ஏற்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்ட விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் இயந்திரவியல் பயிலும் மாணவர் மனு ஜெய்ஸ்வால் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு இன்றும் எந்தவித சேதமும் இல்லாமல் கட்டிடக்கலைக்கு எடுத்து காட்டாக விளங்கி கொண்டிருக்கும் கல்லணையின் வரலாற்றை விளக்கும் பண்டைய தமிழ்நாட்டின் கட்டிடக்கலை என்ற ஆங்கில நூலினை விஐடி இயந்திரவியல் பள்ளி பேராசிரியர் முனைவர் சத்யஜித் கோஷ் வழிகாட்டுதலுடன் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.இந்த நூல் வெளியிட்டு விழா விஐடியில் உள்ள டாக்டர் அம்பேத்கார் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்நூலினை பற்றி பேராசிரியர் சத்யகோஷ் நூலாசிரியர் மனு ஜெய்ஸ்வால் ஆகியோர் விளக்கி கூறினார்.நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து நூலினை வெளியிட்டு பேசியதாவது : 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு கேரளா கர்நாடகா இலங்கை உள்ளிட்ட பகுதிகளை ஆட்சி செய்த சோழர் மன்னர்களில் கரிகால மன்னர் ஆட்சி காலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை அமைக்கப்பட்டது. 329மீட்டர் நீளத்தில் 20மீட்டர் உயரத்துடன் அமைக்கப்பட்ட இந்த கல்லணை இன்றைக்கும் பண்டைய தமிழகத்தின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்து காட்டாக விளங்கி வருகிறது.பண்டைய இந்திய நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரம் பண்பாடு மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றிக்கு எடுத்து காட்டாக விளங்கி வரும் சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையாக பண்டைய தமிழக கட்டிடக்கலை விளங்கியுள்ளது. அன்று சுமார் 69 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதிபெறும் வகையில் கட்டப்பட்ட கல்லணையின் மூலம் இன்று சுமார் 10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. நீர் ஆதாரம் மற்றும் நீர் பாதுகாப்பிற்கான வழிமுறைகள் காணும் வகையில் கல்லணை தொழில் நுட்பத்தை விளக்கும் இந்தநூல் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குறியது.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முனபே நீர் ஆதாரத்தை கொண்டு அதனை பாதுகாக்கும் வகையில் கல்லணை கட்டப்பட்டுள்ளது.தற்போது போதிய பருவ மழை இல்லாததால் நீர் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்தில் நீர் பற்றாக்குறை அதிகரிக்கும் எனவே மழை நீரை சேமித்து பாகாக்க வேண்டிய நிலை உள்ளதால் ஏரிகள் குளங்கள் ஆற்றுக்கால்வாய்களை நாம் தூர் எடுத்து சீரமைக்க வேண்டும் என்றார்.இந்நிகழ்ச்சியில் விஐடி இயந்திரவியல் பள்ளி முதுநிலை பேராசிரியர் நாகேஷ்வர ராவ் மற்றும் விஐடி கட்டிடக்கலை பள்ளி மாணவமாணவியர் பங்கேற்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்