காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தை மதிப்பீடு செய்வதற்காக தேசியதர நிர்ணயக் குழுவினர் வருகை:

alagappa univercity

   காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக் கழகத்தில் கடந்தஐந்து ஆண்டுகளில் கற்றல், கற்பித்தல் உத்திகள், விரிவாக்கம், நிர்வாகம், ஆய்வு மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை மதிப்பீடு செய்வதற்காக தேசியதர நிர்ணயக் குழுவினர் வருகை.
 இதுகுறித்து பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் தெரிவித்ததாவது:
 கல்விவளர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, தொழில் நுட்பவளர்ச்சி, சுற்றுச் சூழல் மற்றும் பொருளாதார மேம்பாடு, ஆகிய அம்சங்களை கவனத்தில் கொண்டு “செயலிற் செம்மை” என்ற நோக்கோடு அழகப்பா பல்கலைக்கழகம் சிறப்பாக செயலாற்றிவருகிறது.
 இதன் அடிப்படையில், அழகப்பாபல்கலைக் கழகத்திற்கு தேசியநிர்ணயக் குழு முதன் முதலில் “ஏ” தகுதியை கடந்தமே 2005-ஆம் ஆண்டு வழங்கியது.  அடுத்த ஆறு ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள பல்வேறு வளர்ச்சிகளை மறுமதிப்பீடு செய்து கடந்த நவம்பர் 2011-ஆம் ஆண்டு மீண்டும் மறுதர மதிப்பீட்டில 3.21 புள்ளிகளுடன் “ஏ”தகுதியைமீண்டும் வழங்கியது.   
 தற்பொழுது, மூன்றாவது முறையாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்தஐந்து ஆண்டுகளில் கற்றல், கற்பித்தல் உக்திகள், விரிவாக்கம், நிர்வாகம், ஆய்வு மற்றும் அறிவாற்றல், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வளாக மேம்பாடு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிகளை மதிப்பீடு செய்வதற்காக தேசிய தரநிர்ணயக் குழுவினர் ஏப்ரல் 10 முதல் 12 வரை வருகைத்தந்து ஆய்வுசெய்ய உள்ளனர்.
 உத்தர கண்ட் திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. நாகேஸ்வர் ராவ் அவர்கள் தலைமையின் கீழ் பேராசிரியர்கள்
 1.பி.எஸ்.குரோவர், குரு கோபிந்த் சிங் இந்திர பிரஸ்தாபல் கலைக்கழகம், டெல்லி
2.டி.கே. மகேஸ்வரி, குருகுல் காங்கிரி பல்கலைக்கழகம், ஹர்த்வார்
3.ஆர்.ஜி. சோன்காவாடே, சிவாஜி பல்கலைக்கழகம், கொல்காபூர்
4.திலீப் எஸ். பாட்டீல், மும்பை பல்கலைக்கழகம்
5.சஞ்சய் பட், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி
6.ஆ~hசுக்லா ,பர்கதுல்லா பல்கலைக்கழகம், போபால்
7.ஜெ.கே. டண்டன,; முன்னாள் வணிகவியல் துறைப் பேராசிரியர், ராஜஸ்தான் பல்கலைக்கழகம்

  ஆகியோர் வருகை தர உள்ளார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ