முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      தேனி
Image Unavailable

  தேனி.- தேனி மாவட்டம், தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா (10.05.2017) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தேக்கடி ராஜீவ்காந்தி கலையரங்கத்தில்  தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்ந.வெங்கடாசலம்,  தலைமையில் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்ஜி.ஆர்.கோகுல்,  முன்னிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று தமிழக-கேரள மக்களால் கொண்டாடப்பட்டு வருவதனையொட்டி, இவ்வாண்டும் 10.05.2017 அன்று திருவிழா நடைபெறுவதையொட்டி, திருவிழாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ய இருப்பதால் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லுவதற்கு ஏதுவாக போக்குவரத்து வசதி, சுகாதாரம், குடிநீர், தற்காலிக பந்தல்கள் மற்றும் கழிப்பிட வசதி, பாதைகள் செப்பனிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
  மேலும், காவல்துறையினர் கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஆண், பெண் காவலர்களை பணியில் ஈடுபடுத்தி உரிய பாதுகாப்பு வழங்குவது, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சார்ந்த வனத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பக்கதர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்புத்துறை மூலம்  முதலுதவி (யுஅடிரடயnஉந) வாகனம், தீயணைப்பு மீட்பு வாகனத்தினை தயார் நிலையில் நிறுத்தி வைப்பது, இருமாநில வனத்துறையினர் வன விலங்குகளால் பொது மக்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைப்பது, பக்தர்கள் குறைந்தபட்சம் 5 லிட்டர் குடிநீர் குவளை பயன்படுத்திடவும், காலை 6 மணிமுதல் மாலை 3 மணிவரை கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்குவது, பக்தர்கள் பயன்படுத்திய பொருட்களை உடனுக்குடன் அகற்றுவதற்கான பணியில் போதிய பணியாளர்களை ஈடுபடுத்துவது குறித்து இரு மாநில அலுவலர்களுடன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர்ந.வெங்கடாசலம்,  தலைமையில் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சித்தலைவர்ஜி.ஆர்.கோகுல்,  முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டார்கள்.
 இக்கூட்டத்திற்குபின் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, மங்கலதேவி கண்ணகி கோவிலின் விழா கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்களுடனும், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மங்கலதேவி கண்ணகி கோயில் விழா சிறப்பாக நடைபெற அனைத்து அடிப்படை வசதிகள் செய்துதரப்பட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இரு மாநில பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவித்தார்.
  கூட்டத்தில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்வீ.பாஸ்கரன்  பெரியார் புலிகள் சரணாலய துணை இயக்குநர்பாபு, இ.வ.ப.,  தேனி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.பொன்னம்மாள்  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)ஞானசேகரன்  கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.பத்மாவதி  வருவாய் கோட்டாட்சியர்கள்ரவிச்சந்திரன் ராதாகிருஷ்ணன்  வட்டார போக்குவரத்து அலுவலர்செல்வக்குமார்  துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்ச.தங்கவேல்  மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மரு.சுகுணா  மாவட்ட சுற்றுலா  அலுவலர்மருதுபாண்டியன்  காவல் துணை கண்காணிப்பாளர்கள்பிரபாகரன் அண்ணாமலை  உத்தமபாளையம் வட்டாட்சியர்குமார்  கண்ணகி கோயில் அறக்கட்டளை உறுப்பினர்கள்தமிழாதன் ராஜகணேசன் முருகன்  இரு மாநிலங்களைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago