முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் 18 பட்டி கிராம மஞ்சுவிரட்டு 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை - மதுரை மாவட்டம், மேலூரில் 18பட்டியைச் சேர்ந்த கிராமத்தின் மஞ்சுவிரட்டு மேலூர் மாத்தி கண்மாயில் நடைபெற்றது. இந்த மஞ்சு விரட்டை 18-பட்டியைச் சேர்ந்த ஏழு கரை அம்பலகாரர்களும் மற்றும் ஐந்து கரை அம்பலகாரர்களும் மற்றும் இளங்கச்சிகளும் கடந்த ஒரு மாதமாக இந்த மஞ்சுவிரட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். மேலூர் பேருந்து நிலையம் முன்பு உள்ள ஸ்ரீகாஞ்சிவனம் சுவாமி கோவிலில் இருந்து 18பட்டி கிராம அம்பலகாரர்களும் இளங்கச்சிகளும் ஜவுளிகளுடன் ஊர்வலமாக வந்து மஞ்சுவிரட்டில் கலந்து கொண்ட காளைகளுக்கு 18பட்டி கிராமத்தின் சார்பாக ஜவுளி மரியாதை செய்யப்பட்டது.  காளைகளுக்கு மரியாதை முடிந்தவுடன் வருவாய்த்துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு கிராமத்தின் சார்பாக மரியாதை செய்யப்பட்டது.

பின்னர் மேலூர் காஞ்சிவனம் சுவாமி கோயில்காளை முதல் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. அதன் பின்னர் ஒவ்வொரு காளைகளாக  அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. மாடுபிடி வீரர்கள் சில காளைகளை மடக்கி பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. ஆயிரக்கணக்கான மாடுபிடி வீரர்களும் பல ஆயிரக்கணக்கான பொது மக்களும், பெண்களும் கலந்து கொண்டனர். காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பொது மக்களுக்கும் பாதுகாப்பிற்காக காவல்துறையைச் சேர்ந்தவர்களும் மருத்துவ அலுவலர்களும் தீயணைப்பு வீரர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்