முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், காத்தாடி மட்டம் மற்றும் அதிகரட்டி கிராம பகுதிகளில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.பொ.சங்கர். செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டார்.

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      நீலகிரி
Image Unavailable

நீலகிரி மாவட்டம் உதகை வட்டம் காத்தாடி மட்டம் மற்றும் அதிகரட்டி கிராம பகுதிகளில் இன்று தோட்டக்கலைத்துறையின் சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் பண்ணைப்பள்ளியின் செயல்முறைகளை மாவட்ட கலெக்டர்  செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு செய்தியாளர்களிடையே கூறியதாவது,

“நீலகிரி மாவட்ட மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். அதனை கருத்திற்கொண்டு வேளாண் தொழிலை மேம்படுத்துவதையும், விவசாயிகளின் நலனை காக்க வேண்டுமென்பதையும் தமது கடமையாக கொண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஆசியுடன், தமிழக அரசு முழு முயற்சியுடன் பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.           நீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரநிலை என்பது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்களையே சார்ந்துள்ளது. தோட்டக்கலைப்பயிர்களின் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் மேம்பாட்டிற்கு தோட்டக்கலைத்துறையின் மூலமாக பல்வேறு மானிய திட்டங்கள் ஆண்டு தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக காய்கறி மற்றும் மலர்கள் உற்பத்தியை அதிக அளவில் ஊக்குவிக்கும் திட்டங்கள் வாயிலாக காய்கறிகளின் உற்பத்தி திறன் 20 சதவீதமாகவும், மலர்கள் உற்பத்தியை 30 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

           மேலும் மலைப்பகுதி சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம், நுண்ணீர் பாசன திட்டம், ஓருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் என விவசாய பெருங்குடி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ், பூகோஸ், புருக்கோலி போன்ற பயிர்கள் 240 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.உணவாக பயன்படுத்தும் இந்த காய்கறி பயிர்களில் வைரமுதுகு பூச்சியினை கட்டுபடுத்த விவசாயிகள் அதிக அளவு பூச்சி மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். நேரடி உணவாக பயன்படுத்தப்படும் இப்பயிர்களில் தெளிக்கப்படும் இரசாயன பூச்சி கொல்லிகளின் நச்சுதன்மை உடலில் சேர்ந்து சில பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.

இதனை கட்டுபடுத்தும் வகையில் சில தொழில்நுட்பங்களை தோட்டக்கலைத்துறை விவசாயிகளிடையே அறிமுகப்படுத்தி உள்ளது. எனவே குறிப்பாக வைரமுதுகு பூச்சி விரும்பி உண்ணும் தாவரங்களான  கடுகு, செண்டுமல்லி பயிர்களை ஊடுபயிராக முட்டைகோஸ் நடவு செய்வதற்கு 20 நாட்களுக்கு முன்பு 20 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதை மற்றும் செண்டுமல்லி விதை வரப்பு ஓரங்களிலும், நடவு செய்து 20 நாட்கள் கழித்து 10 வரிசைக்கு ஒரு வரிசை கடுகு விதைக்கவும், செண்டு மல்லி சுற்றிலும் நடவு செய்ய ஆலோசனை வழங்கப்படுகிறது. இதனால் முட்டைகோஸ் பயிரினை தாக்கும் பூச்சிகள் கடுகு மற்றும் செண்டுமல்லி பயிரினை உட்கொள்ளுவதால் முட்டை கோஸ் பயிர் பூச்சி தாக்குதலில் இருந்து காப்பாற்றப்படுகிறது மேலும் இரசாயன பூச்சி கொல்லிகளினால் ஏற்படும் கெடுதல் குறைவதோடு அதற்கான செலவும் மிச்சமாகிறது

இத்தொழில் நுட்பத்தினை விவசாயிகளிடம் எடுத்துக்காட்டும் வகையில் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல்விளக்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.உதகை வட்டாரம் பாலக்கொலா கிராமத்திற்குட்பட்ட பரமூலை பகுதியில் ராஜன் என்ற விவசாயி 1.50 ஏக்கர் பரப்பிலும், குன்னூர் வட்டாரம் அதிகரட்டி கிராமத்தில் உமாதேவி என்ற விவசாயி 0.30 ஏக்கர் பரப்பிலும் செயல் விளக்க திடல் அமைத்திருந்தனர். இத்திடல்களில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மான்ய விலையில் வழங்கப்பட்ட விளக்குபொறி, இனக்கவர்ச்சிபொறி, மஞ்சள் வண்ண பொறிகள் விவசாயிகளால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

           மேலும் இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுபாடு திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில் 140 விவசாயிகளுக்கு பயிற்சியும், 120 விவசாயிகளுக்கு விளக்குபொறி, இனகவர்ச்சி பொறியும் மற்றும் மஞ்சள் வண்ண பொறிகளும் ரூ.7.09 இலட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகள் இத்திட்டத்தினை பயன்படுத்தி இயற்கையோடு இணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்து குறைந்த செலவில் நஞ்சற்ற உணவு பொருள் உற்பத்தியினை பெருக்க வேண்டும்”. ஏன மாவட்ட கலெக்டர்  பேசினார்.

இச்செய்தியாளர் பயணத்தின்போது, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ந.மணி, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago