முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்தஒரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் படைகள் தயார்: நவாஸ் செரீப்

செவ்வாய்க்கிழமை, 11 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  -  இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளநிலையில் எந்தஒரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க பாகிஸ்தான் படைகள் தயார் என நவாஸ் செரீப் கூறிஉள்ளார்.

நவாஸ் பேச்சு
பலுசிஸ்தானில் கடந்த வருடம் கைது செய்யப்பட்ட இந்தியர் குல்பூஷன் ஜாதவை இந்திய உளவு அமைப்பான ‘ரா’–வுக்காக பணியாற்றியதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அவருக்கு மரண தண்டனையை விதித்து உள்ளது. இவ்விவகாரத்தில் கடும் எதிர்விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளது. குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்த பின்னர் இரு நாடுகள் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டு உள்ளநிலையில் அனைத்து நாடுகளுடன், குறிப்பாக அண்டைய நாடுகளுடன் நல்ல நட்புறவையே விரும்புகிறோம் என அந்நாட்டு பிரதமர் நவாஸ் செரீப் கூறிஉள்ளார்.

பதிலடி
மேலும் எந்தஒரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்க பாகிஸ்தானின் ராணுவப்படைகள் முழுமையான திறனை கொண்டு உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராணுவப்படையின் மீது முழு நம்பிக்கையும் கொண்டு உள்ளது என நவாஸ் செரீப் கூறிஉள்ளார் என பாகிஸ்தான் ரேடியோ செய்தி வெளியிட்டு உள்ளது. பாகிஸ்தான் அமைதியை விரும்பும் நாடாகும், ஆனால் இதனை பாகிஸ்தானுடைய பலவீனமாக பார்க்க கூடாது என்றும் கூறிஉள்ளார் நவாஸ் செரீப்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago