முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் 1732 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியாக ரூ. 2 கோடியே 68 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      தர்மபுரி

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சார்பில் 433 பயனாளிகளுக்கு ரூ. 53 இலட்சத்து 50 ஆயிரத்து 581 மதிப்பில் 1732 கிராம் தாலிக்கு தங்கமும் மற்றும் ரூ. 2 கோடியே 14 இலட்சத்து 74 ஆயிரத்து 142 மதிப்பிலான திருமண நிதியுதவிகளை என மொத்தம் ரூ. 2 கோடியே 68 இலட்சத்து 24 ஆயிரத்து 723ஃ- மதிப்பிலான நலத்திட்டங்களை மாவட்ட ஆட்சியர், கே. விவேகானந்தன், தலைமையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் நேற்று (12.04.2017) வழங்கினார். பின்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்ததாவது :-தமிழக அரசின் சார்பில் வழங்கக் கூடிய நலத்திட்ட உதவிகளில் ஒன்றான தாலிக்குத் தங்கம் நம் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் வாயிலாக தமிழக முதலமைச்சர் அவர்களின் சிறப்பு திட்டத்தின்கீழ் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் 433 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் 433 ஓ 4 கிராம் ஸ்ரீ 1732 கிராம் தங்கம் ரூ. 53 இலட்சத்து 50 ஆயிரத்து 581 மதிப்பிலும் மற்றும் மொத்த நிதி உதவியாக ரூ. 2,14,74,142- என மொத்தம் ரூ. 2 கோடியே 68 இலட்சத்து 24 ஆயிரத்து 723- மதிப்பிலான வழங்கப்படுகிறது. இதில் 433 நபர்கள் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள். தமிழக முதல்வர் அவர்களின் படித்த ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2016-17ம் நிதியாண்டில் தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் 18,836 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 75,344 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 61,30,74,142- (ரூபாய் அறுபத்து ஒரு கோடியே முப்பது இலட்சத்து எழுபத்தி நான்காயிரத்து நூற்றி நாற்பத்தி இரண்டு மட்டும்) வழங்கப்பட்டுள்ளது. இதில் பட்டம் மற்றும் பட்டயம் பெற்றவர்கள் மட்டும் 6532 பயனாளிகள் ஆவார்கள்.2016-17 நிதியாண்டில் மட்டும் இதுவரை இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டின் 2849 பயனாளிகளுக்கு தலா 4 கிராம் தங்க நாணயம் வீதம் மொத்தம் 11,396 கிராம் தங்கம் மற்றும் நிதி உதவியாக ரூ. 12,67,24,142 வழங்கப்பட்டுள்ளது. இதில் 2217 நபர்கள் பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற பயனாளிகள் ஆவார்கள். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 2011ம் ஆண்டு முதல் 2016 ம் ஆண்டு வரை 10, 12-ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயம் படித்த 15,987 ஏழை பெண்களுக்கு ரூ. 50 கோடியே 75 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 63984 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2016-2017ம் ஆண்டில் 10, 12-ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயம் படித்த 2416 ஏழை பெண்களுக்கு ரூ. 10 கோடியே 52 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 9664 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று (12.04.2017) இரண்டாம் கட்டமாக 10, 12-ம் வகுப்பு, பட்டம் மற்றும் பட்டயம் படித்த 433 ஏழை பெண்களுக்கு ரூ. 2 கோடியே 68 இலட்சத்து 24 ஆயிரத்து 723ஃ- மதிப்பிலான 1732 கிராம் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியும் வழங்கி உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.முன்னதாக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரசின் சாதனைகள், திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பார்வையிட்டார்.இவ்விழாவில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஆர். முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம். காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செந்தில்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் எஸ். ரேவதி, கோட்டாட்சியர் இராமமூர்த்தி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.வி. அரங்கநாதன், கூட்டுறவு நிறுவனங்களின் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத் தலைவர் எம். பழனிசாமி, மத்திய கூட்டுறவு இயக்குநர் வேலுமணி உட்பட துறை ரீதியான அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்