முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சாவூரில் போராடும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள்: அமைச்சர் இரா.துரைக்கண்ணு சந்தித்து போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டம், கலெக்டர் அலுவலக வளாக முன்பகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென்று தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று (12.04.2017) வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள், கலெக்டர் ஆ.அண்ணாதுரை, , மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, ஆகியோர் விவசாயிகளை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாநில அரசு மத்திய அரசை வலியுறுத்தயுள்ளது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் சந்தித்து பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அம்மா அவர்களின் அரசு காவிரி நீர் உரிமையை பெறுவதற்காக சட்ட போராட்டம் நடத்தி நடுவர் மன்ற தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. நடுவர் மன்ற தீர்ப்பின்படி நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று தொடர்ந்து மாநில அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழக முதலமைச்சர் அவர்கள் நடுவர் மன்ற தீர்ப்பின்படி காவிரி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார். டெல்லியில் போராடும் விவசாயிகளை நான் சந்தித்தேன். பின்னர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. விவசாயிகள் கோரிக்கைகளை முன் வைத்தனர். உச்ச நீதி மன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தனர். மாநில அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு குடிமராமத்து பணி என்ற திட்டத்தை தொடங்கி ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த பணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் ரூ.195 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளை முதலமைச்சர் அவர்கள் பாதிக்கு மேல் நிறைவேற்றியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் தொடர்பாக கலெக்டர் அவர்கள் மாநில அரசு அறிக்கை அனுப்பி வருகிறார். இங்கு போராடு விவசாயிகள் காந்திய வழியில் அறப்போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை கைவிட வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையில் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துச் செல்லப்படும். விவசாயிகள் முதலமைச்சர் அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும். இவ்வாறு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்