முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை மாவட்டம் மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதி பகுதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன் வழங்கினார்.

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      கோவை
Image Unavailable

கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை வட்டம், மாவுத்தம்பதி பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன்,  தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொடர்பு முகாமில் 63 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகளை வழங்கி மாவட்ட கலெக்டர்  பேசுகையில்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மென்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புறங்களிலும் மாவட்ட கலெக்டர்  தலைமையிலும், மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையிலும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழக அரசால் அறிவிக்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தனிமனிதன் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கும் அடிப்படையாக அமைகிறது.  குறிப்பாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்  அடிப்படையில் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயசார்பு அடையும் வகையில்  பொருளாதாரத்தில் யாரையும் சார்ந்திருக்காமல் சுயமாக தன்னைத்தானே முன்னேற்றிக் கொள்வதுடன் தன்னுடைய குடும்பத்தையும் முன்னேற்றம் அடையும் வகையில் வழிவகை செய்துள்ளார்கள்.

இன்றைக்கு மக்கள் தொடர்பு முகாமிற்கென மதுக்கரை  வட்டத்திற்குட்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்களிடமிருந்து, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஏற்கனவே பெறப்பட்ட மனுக்களில் தகுதியுடைய  மனுதாரர்களுக்கு உடனடி தீர்வு மூலம் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மீதமுள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் இன்றைய தினம் பெறப்பட்டுள்ள 40 மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதுடன், அனைத்து பயனாளிகளுக்கும் உரிய நடவடிக்கையின் மூலம் தீர்வு காணப்படும்.

இம்முகாமில் இன்று சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 24 பயனாளிகளுக்கு முதியேர் உதவித்தொகை பெறுவதற்கு ஆணை, 22 பயளாளிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 4 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரம், 4 பயனாளிகளுக்கு இலவச சலவை பெட்டிகள், 4 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் சான்று,  வேளாண்மைத்துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு விதை தெளிப்பான் மானியம், சிவப்பு கூண்வண்டு இனக்கவர்ச்சி பொறி மானியம், விதைகள், தோட்டக்கலை சார்பாக பண்ணை சீரமைப்புக்கான செயல்முறை 1 பயனாளிகளுக்கும், என மொத்தம் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுபோன்று தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி, பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும். என இந்த தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன். என மாவட்ட கலெக்டர் த.ந.ஹரிஹரன்,  பேசினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை,சண்முகம், வருவாய் கோட்டாட்சியர் ச.மதுராந்தகி, சமூக பாதுகாப்புத்திட்டத் தனித்துணை கலெக்டர் சென்னியப்பன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்