முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தள்ளுபடி கொடுத்தாலும் விற்க முடியவில்லை : நிறுவனங்களில் 1,40,000 வாகனங்கள் தேக்கம்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

 சென்னை  - 2017 ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-III ரக வாகனங்களை விற்பனை மற்றும் பதிவு செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனால் இந்தியாவில் அனைத்து ஆட்டோமொபைல் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் பிஎஸ்-III ரக வாகனங்களை விற்பனை செய்தாக வேண்டிய சூழ்நிலைக்கு  தள்ளப்பட்டனர்.

தள்ளுபடி அறிவிப்பு
இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் இரு சக்கர வாகனத்திற்கு 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் வரையிலான தள்ளுபடியை அறிவித்தனர்.இதன் காரணமாக வாகன ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆனாலும்  பயன்கிட்டவில்லை . வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் தள்ளுபடிகளை வாரி வழங்கியும், இந்தியா முழுவதும் சுமார் 1,40,000 பிஎஸ்-III ரக வாகனங்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளத

முக்கிய நிறுவனம்
தேக்கம் அடைந்துள்ள 4 சக்கரம் மற்றும் அதற்கும் அதிகமான வாகனங்களில் டாடா மோட்டார்ஸ், ஆசோக் லெய்லாண்டு, மஹிந்திரா & மஹிந்திரா, வால்வோ ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பு விற்பனை ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 5,076 கோடி ரூபாய். இரு சக்கர வாகன பிரிவில் ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா, டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களின் 78,638 வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் மதிப்பு இந்த வாகனங்களின் மொத்த மதிப்பு 336 கோடி ரூபாய்.

நஷ்டம் எவ்வளவு?
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நிறுவனங்கள் 10-50 சதவீதம் வரையிலான ஆஃப்ரை அளித்த நிலையில், சுமார் 1,200 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.தற்போது நிறுவனங்களுக்கு இருக்கும் ஓரே வழி தேக்கம் அடைந்த வாகனங்களை ஏற்றுமதி செய்வது தான். காரணம் ஏற்றுமதி செய்யாவிட்டால் இந்தியா முழுவதும் இருக்கும் பிஎஸ்-III வாகனங்களைத் தொழிற்சாலைக்குக் கொண்டு வந்து அதனைப் பிஎஸ்-IV தரத்திற்கு மாற்ற வேண்டும். இது மிகவும் காஸ்ட்லியான வழி என்பதால் நிறுவனங்கள் அதனைத் தவிர்த்து வருகிறது.இதனால் இவ்விரண்டுக்கும் மாற்று வழி ஏதேனும் உண்டா என்பதை ஆராய்ந்து வருகிறது.

புள்ளிவிவரங்கள்
ஆட்டோமொபைல் உற்பத்தி அமைப்பு அளித்த தகவலின் படி மார்ச் 20 வரையில் இந்தியாவில் சுமார் 8,24,000 வாகனங்கள் இருந்துள்ளது. இதில் 6,71,000 இரு சக்கர வாகனங்கள், 96,700 வர்த்தக வாகனங்கள், 40,048 சக்கர வாகனங்கள், 16,198 பயணிகள் வாகனங்கள் என் புள்ளிவிவரங்களை SIAM அமைப்பு வெளியிட்டுள்ளது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு 20,000 கோடிக்கும் அதிகம்.பொதுவாக 90 சதவீத இருசக்கர வாகனங்கள் இருப்பு நிலையிலேயே இயங்குவதால், உச்ச நீதிமன்றத்தின் அறிவிப்புக் காரணமாகச் சுமார் 40 சதவீத வாகனங்கள் தேக்கம் அடைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago