முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணினி கல்வியில் கிருஷ்ணா மெட்ரிக் பள்ளிமாநிலஅளவில் ஹாட்ரிக்சாதனை

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      வேலூர்
Image Unavailable

 

கணினி கல்வியில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி தொடர்ந்து மாநில அளவில் சிறப்பிடம் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்த ஆசிரியர் குழுக்களை பள்ளி நிர்வாகம் அழைத்து பாராட்டு தெரிவித்து உள்ளது.. இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகர எல்லை, கைனூர் ஊராட்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமத்தின் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி உள்ளது. இந்த பள்ளியைச் சேர்ந்தவர்கள் திருச்சி பாரதிதாசனார் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் 8ந்தேதி ஐஇசிடி சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான கணினி கல்வியில் போட்டிகளில் கலந்து கொண்டனர். மாநில அளவில் சிறப்பிடமும் பெற்றனர். இதற்காக அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளிக்கு திருச்சி பாரதிதாசனார் பல்கலைக் கழக துணை வேந்தர் டாக்டர் முத்துக்குமார் மற்றும் ஐஇசிடி இயக்குனர் டாக்டர் பார்த்தசாரதி ஆகியோர் பரிசுகோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இதனை தொடர்ந்து ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி முதல்வர் தாமோதரன், மற்றும் கணினி ஆசிரியர்கள் ஏ.ரூமானா, எம்.ரேவதி ஆகியோர் அரக்கோணம் திரும்பினார்கள். மாநில அளவில் வெற்றி பெற்று பரிசு வென்ற கோப்பை மற்றும் சான்றுகளுடன் இக்குழுவினர் கல்லூரி சேர்மன் டிஆர்.சுப்பிரமணியம், செயலாளர் டிஆர்எஸ்.ரவிக்குமார், மற்றும் இயக்குனர் சாம்பமூர்த்தி, ஆகியோரிடம் ஒப்படைத்தனர். அப்போது நிர்வாகத்தினர் இக்குழுவினர்களை பாராட்டியது. தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோப்பை மற்றும் சான்றுகளை பெற்று கல்வி நிறுவனத்திற்கு பெருமை சேர்ப்பதுடன் ஹாட்ரிக் சாதனையையும் படைத்து உள்ளனர் என தெரிவித்தார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago