முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2,291.698 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன: கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து பேசும் போது தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குளங்களில் 1328.23 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 462.460 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. ஊராட்சிப்பகுதிகளில் உள்ள குளங்களில் 1409.11 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 619.268 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொது ஃ புறம்போக்கு இடங்களில் 481.370 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 81.690 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 717.402 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 86.880 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. மேலும் பொதுப்பணிப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் 3618.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 617.700 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளில் 1437.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 137.140 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 110.900 கி.மீட்டர் நீளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 85.500 கி.மீட்டர் நீளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 41.700 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 4.560 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நகராட்சிப்பகுதிகளில் 148.090 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 127.450 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் 118.060 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 69.050 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை, பொது புறம்போக்கு இடங்கள், தனியார் இடங்கள் நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 9409.865 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு இதுவரை 2291.698 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தனியார் நிலங்களில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அந்தந்த நிலச் சொந்தக்காரர்களே தாமாக முன்வந்து அகற்றிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு தானே முன்வந்து அகற்றவில்லை என்றால் ஊராட்சியின் மூலம் தனியார் நிலங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, அதற்காக செலவினத்தொகையை இருமடங்கு அபராதத்துடன் அந்தந்த தனியார் நில சொந்தக்காரர்களிடம் வசூலிக்கப்படும் என அந்தந்த ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் நிலச்சொந்தக்காரர் களுக்கு அறிவிப்புகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை பொதுமக்கள் தாங்களே முன்வந்து அகற்றி வருகின்றனர். மீதமுள்ள இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நிலத்தடி நீர் பாதிக்கக்கூடிய சீமைக்கருவேல மரங்களை அகற்றிட அரசுத்துறை அலுவலர்கள் முனைப்புடன் பணியாற்றிட வேண்டும். பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்