முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் குடிநீர் பந்தல்கள்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபா,ஸ்கர் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      கரூர்

 

கரூர், ஆண்டான்கோவில், புலியூர், தாந்தோன்றி ஆகிய பகுதிகளில் கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் குடிநீர் பந்தல்களை கலெக்டர் அவர்கள் தலைமையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார். கரூர் மாவட்டத்தில், கோடை வெயிலை எதிர்கொள்ளும் வகையில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஆகிய துறைகள் வாயிலாக மாவட்டம் முழுவதும் குடிநீர் பந்தல்களை அமைக்க திட்டமிடப்பட்டு துவக்கமாக கரூர், ஆண்டான்கோவில் கீழ்பாகம், ஊராட்சி அலுவலகம் அருகிலும், தாந்தோன்றிமலை கிராம நிர்வாக அலுவலகம் அருகிலும், புலியூர் பேருந்துநிலையம் அருகிலும், கரூர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் இன்று (12.04.2017) திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்பூசணிப்பழம், குளிர்ந்த குடிநீர், நிலவேம்புக்குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:கோடைகால வெயில் மற்ற மாவட்டங்களை விட கரூர் மாவட்டத்தில் அதிகமாக உள்ளதை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து வெப்பத்தை எதிர்கொள்ளத்தக்க வகையில் இளநீர், குளிர்ந்த குடிநீர், மோர், தர்பூசணிப்பழம், நிலவேம்புக்குடிநீர் உள்ளிட்;டவைகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கலெக்டர் தெரிவித்ததாவது: பொதுமக்கள் கோடைகால வெயிலில் அதிகம் வெளியில் செல்லாமலும், குடை மற்றும் காலணிகளை அவசியம் பயன்படுத்த வேண்டும். தண்ணீர் தேவையான அளவு பருகியும், நீர்ச்சத்து நிறைந்த பொருட்களையும், காய்கனிகளையும் உட்கொள்ள வேண்டும். வெளியில் செல்வோர், பேருந்துக்காக காத்திருப்போர் ஆகியோர்களின் இன்னல்களை போக்கிட மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி மற்றும் நகராட்சித்துறை ஆகிய துறைகள் வாயிலாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல் அமைத்து பழம், மோர், குடிநீர் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இவைகளை பயன்படுத்தி கடும் வெப்பத்திலிருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென கலெக்டர் அவர்கள் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், நகராட்சி ஆணையர் அசோக்குமார், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜ்மோகன், வட்டாட்சியர்கள் சக்திவேல், ராம்குமார், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்