முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீராண குடிநீரை வழங்கும் வகையில் 64 வணிகரீதியான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது: கலெக்டர் வா.சம்பத், தகவல்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      சேலம்
Image Unavailable

 

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டறங்கில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஓன்றியங்கள்,நகராட்சி, பேரூராட்சிகளுக்கான குடிநீர் வழங்கல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நேற்று (12.04.2017) கலெக்டர் வா.சம்பத், தலைமையில் நடைபெற்றது. இது குறித்து கலெக்டர் தெரிவித்ததாவது. தமிழக முதலமைச்சர் அவர்கள் வறட்சி தொடர்பான பிரச்சனைக்கு முக்கியத்துவம் அளித்து அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து அத்தியாவசிய தேவையான குடிநீர் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் குடிநீர் தொடர்பான ஏதேனும் புகார் இருந்தால் தெரிவிக்க ஏதுவாக 58 பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் மற்றும் 20 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 385 கிராம ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் சீரான முறையில் வழங்கிட தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடிநீர் விநியோகம் குறித்து அவர்களின் குறைகளை தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் மற்றும் தொலைபேசி எண்களுக்கு தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் முறையாக அனுமதி பெறாத 40 வணிக குடிநீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டு துண்டிக்கபட்டுள்ளது, 12 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, நகராட்சிப்பகுதிகளில் 116 வார்டுகளில் 9 வணிக குடிநீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டு துண்டிக்கபட்டுள்ளது, 37 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பேரூராட்சிப்பகுதிகளில் 510 வார்டுகளில் 11 வணிக குடிநீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டு துண்டிக்கபட்டுள்ளது, 24 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமபஞ்சாயத்துகளில் 5,109 வார்டுகளில் 4 வணிக குடிநீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டு துண்டிக்கபட்டுள்ளது, 9 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, மேலும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் முறைகேடாக பயன்படுத்திய 60 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சேலம் மாவட்டம் முழுவதும் முறையாக அனுமதி பெறாத 64 வணிக குடிநீர் இணைப்புகளும் கண்டறியப்பட்டு துண்டிக்கபட்டுள்ளது, 142 மின்மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொது மக்களுக்கு தங்குதடையில்லா 100 சதவீதம் குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீர் தேவை மற்றும் அவசியத்தை உணர்ந்து குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திடவும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் குடிநீர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,தெரிவித்தார். இக்கூட்டத்தில் திட்ட இயக்குர் (ஊரக வளர்ச்சி திட்ட முகமை) கே.கவிதா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஈஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜயபாபு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அரவாளி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் தெய்வசிகாமணி, உதவி இயக்குநர் ஊராட்சிகள் (பொறுப்பு) இராஜேந்திரன், மற்றும் தொடர்வுடைய அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்