கடலூர் மாவட்டம் திப்புரெட்டி, ஒறையூர் ஏரிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்ட பணிகள் செய்தியாளர் பயணத்தின்போது கலெக்டர் டி.பி.ராஜேஷ் ஆய்வு

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      கடலூர்

கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ், , கடலூர் மாவட்ட பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதார அமைப்பின் மூலம் கடலூர் வட்டம் களையூர் கிராமத்திலுள்ள திப்புரெட்டி ஏரி மற்றும் பண்ருட்டி வட்டம் ஒறையூர் கிராமத்திலுள்ள ஒறையூர் ஏரி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்ட பணிகளை செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.இந்த செய்தியாளர் பயணத்தின்போது கலெக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 13.03.2017 அன்று குடிமராமத்து பணிகள் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் துவக்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தொழில்துறை அமைச்சர் அவர்களால் களையூர் திப்புரெட்டி ஏரியில் குடிமராமத்து பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இந்த குடிமராமத்து பணிகளின் முன்னேற்றம் குறித்து களையூர் திப்புரெட்டி ஏரி மற்றும் ஒறையூர் ஏரி ஆகிவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திப்புரெட்டி ஏரியின் கரையினுடைய நீளம் 1100 மீ. இந்த ஏரியில் 1 மதகு உள்ளது. இந்த ஏரிக்கரையை பலப்படுத்துவதால் 92 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இந்த ஏரியில் இருந்த முட்புதர்களும், சீமைக்கருவேல மரங்களும் அகற்றப்பட்டு, தூர்வாரப்பட்டு கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளையெல்லாம் நீர் பாசன சங்க உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள். ஒறையூர் ஏரி கரையின் நீளம் 1800 மீ;. பாசன பரப்பளவு 240 ஏக்கர். இந்த ஏரியில் 3 மதகுகளும் 1 கலுங்கலும் உள்ளது. இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. சீமைக்கருவேல மரங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது. ஏரியை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொண்டங்கி ஏரி, களையூர் திப்புரெட்டி ஏரி, தென்னம்பாக்கம் சித்தேரி, தென்னம்பாக்கம் தாங்கல் ஏரி, உடலப்பட்டு ஏரி, ஒறையூர் ஏரி, ஆணைவாரி ஏரி, நெல்லிக்கொல்லை ஏரி, வளையமாதேவி ஏரி மற்றும் எறும்பூர் ஏரி ஆகிய 10 ஏரிகள் தேர்தெடுக்கப்பட்டு ரூ.95 இலட்சம் செலவில் (ரூ.9.5 இலட்சம் வீதம்) குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் பாசன சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பணிகளின் மூலம் 2600 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுகின்றன. விவசாயிகளுக்கு தேவையான விதத்திலும், பணிகள் தரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக அந்தந்த பகுதிகளில் விவசாய சங்கங்களின் மூலம் அவைகளின் 10 சதவிகித பங்களிப்புடன் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் இந்த 10 சதவிகித பங்களிப்பினை உடல் உழைப்பாகவோ, பொருளாகவோ, பணமாகவோ வழங்கலாம். இதேபோல் அடுத்த ஆண்டும் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் 87 பணிகள் நடத்துவதற்கான உத்தேச திட்டம் அரசிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பண்டைய காலத்திலிருந்து இந்த குடிமராமத்து முறை பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது அரசாங்கம், விவசாயிகளோடு இணைந்து இப்பணிகளை சிறப்பான முறையில் செய்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அதிகமான நீரை ஏரிகளில் சேமித்து வைத்து நிலத்தடி நீர் செரிவூட்டப்பட்டு விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு தேவையான நீர் கிடைக்கும். இப்பணிகளால் வருங்காலங்களில் விவசாயிகளுக்கு பேருதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை அளந்து எல்லைக்கள் நடப்பட்டு குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்திலுளள நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை கலெக்டர் என்ற முறையில் எச்சரிக்கை விடுக்கின்றேன். நீர்நிலைகளை பாதுகாக்கும் பொறுப்பு பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகததிற்கும் உள்ளது. நீர்நிலைகளை யாரேனும் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் உடடினயாக அதை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அவ்வாறு காலி செய்யாத ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்தால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்துக்கொள்கிறறேன் எனத் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது விருத்தாச்சலம் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், கடலூர் வெள்ளாறு வடிநில உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் கோவிந்தராசு, உதவி பொறியாளர்கள் தாமோதரன், குமார், கடலூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) சிவா, பண்ருட்டி வட்டாட்சியர் விஜய் ஆன்;ந்த், வட்டார வளர்ச்சி அலுவலர் அ.குர்ஷித் பேகம், கிராம நிர்வாக அலுவலர்கள், விவசாய பாசன சங்கத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: