முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் 207 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஜெயந்தி, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்கள்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      திருப்பூர்
Image Unavailable

                திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் வருவாய்த்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின்  சார்பில்  207 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28.95  இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ச.ஜெயந்தி   முன்னிலையில்   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்  இன்று (12.04.2017) வழங்கினார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர்   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்ததாவது 

மறைந்த  தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சி தலைவி அம்மா  தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும் மற்றும் முன்னேற்றத்திற்காகவும் சிறப்பான திட்டங்கள் அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வந்தார்கள் அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியினை உண்டாக்க வேண்டும் என்பதற்காக எண்ணற்ற திட்டங்களை தாய் உள்ளத்தோடு வாரி வழங்கி உள்ளார்கள். அதன் அடிப்படையில்  மாற்றுத்திறனாளிகளுக்காக நமது மாவட்டத்தில், இது நாள் வரையில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக 18801 நபர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  இதில் கை, கால் பாதிக்கப்பட்டோர் 10120 நபர்களுக்கும், பார்வையற்றோர் 856 நபர்களுக்கும், குறைந்த பார்வை உடையவர்கள் 409 நபர்களுக்கும், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் 3041 நபர்களுக்கும், மனவளர்ச்சி குன்றியாவர்கள் 4066 நபர்களுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டோர் 222 நபர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.  இவர்களுக்கு வேண்டிய மறுவாழ்வு உதவிகள் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு வருவாய்த்துறை மூலம் 4381 நபர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1000/-வீதம்  வழங்கப்பட்டு வருகின்றது.

          மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இம் மாவட்டத்தில் 2515  மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கும், 292 கடும் மாற்றுத்திறனாளிகளுக்கும், 67 தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு என மொத்தம் 2874 மாற்றுத்திறனாளிகளுக்கும்  மாதாந்திர உதவித் தொகையாக  மாதம் ரூ.1500/- வீதம் வழங்கப்பட்டு வருகின்றது மற்றும் தொழுநோயால் பதிக்கப்பட்ட 40 நபர்களுக்கு மாதம் ரூ.1000/- வீதம் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இது தவிர திருமண நிதியுதவித் திட்டங்கள், சிறு மற்றும் குறுந்தொழில் தொடங்க    வங்கிக் கடன் மானியத் திட்டம்,  கல்வி பயிலும் மாணவஃமாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம், மற்றும் இலவச பேருந்து பயணச் சலுகை திட்டம், போன்றவை வழங்கப்படுகின்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து விதமான உதவி உபகரணங்கள், இணைப்பு சக்கரங்கள் பொருத்திய   பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, முதுகு தண்டுவடம்  பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி, நவீன காதொலிக்கருவிகள், நவீன செயற்கை அவயங்கள், (கை, கால்)  போன்றவை வழங்கப்படுகின்றன.  2017-2018-ம் நிதியாண்டில் நிதிநிலை அறிக்கையில் 2000 இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் கொள்முதல் செய்ய அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.  (2016-2017ம் நிதியாண்டில் 1000 இணைப்பு சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டன.) முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் பெற்றுக் கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு  சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் என 2017-2022 - ம் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இந்த நிதியாண்டு நிதி நிலை அறிக்கையில் 10000 - ம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 கோடி திட்ட மதிப்பில் தொழில் திறன் மேம்பாடு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு அளிக்கின்ற நலத்திட்ட உதவிகளை பெறுகின்ற  மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் வளம் பெறவேண்டும் என  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  தெரிவித்தார்கள்.

            இன்று நடைபெற்ற விழாவில், வருவாய்த்துறையின் சார்பில் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளைச் சார்ந்த 132 மாற்றுத்திறனாளிகளுக்கு  தலா ரூ. 12,000/- வீதம் ரூ.15,84,000/- மதிப்பில் மாதாந்திர உதவித்தொகையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2,78,950/- மதிப்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும், விபத்தினால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட7 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,40,000/- மதிப்பில் சிறப்பு சக்கர நாற்காலிகளும், 21 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,000/- மதிப்பில் சக்கர நாற்காலிகளும்,11 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.65,000/- மதிப்பில் இலவச பேருந்து பயணச் சலுகைகளும், 19 மாற்றுத்திறனாளிகளுக்கு கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.4,56,000/-ம் மற்றும் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக ரூ.2,88,000/-ம் என 207 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.28,95,950/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர்  வழங்கினார்கள்.

இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், உடுமலைப்பேட்டை  வருவாய் கோட்டாட்சியர்    சாதனைக்குறள் , மாவட்ட  மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன், சமூகப் பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் சுகவனம், வட்டாட்சியர்கள்  தயானந்தன் (உடுமலைப்பேட்டை), முத்துராமன் (மடத்துக்குளம்) ஜி.வி.ஜி. நிறுவனங்களின் நிர்வாகிகள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்