முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உசிலம்பட்டி வட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி கலெக்டர் வீரராகவராவ் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 12 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டத்தில் 117 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் பொதுமக்கள், பல்வேறு துறைகள் மற்றும் குழுக்களின் பங்களிப்புடன் அகற்றும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்     கொ.வீர ராகவ ராவ்  தொடங்கி வைத்தார்.
 இப்பணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
 சுற்றுப்புற சூழலுக்கு சீர்கேடாய் விளங்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுமாறு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு;ள்ளது. அதனடிப்படையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சீமைக் கருவேலமரங்கள் அகற்றும் பணி மிகத்துரிதமாக நடைபெற்றுவருகிறது. நமது மதுரை மாவட்டத்திலுள்ள 3,75,000 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் தரிசாக உள்ள 1,75,000 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் தற்பொழுது அகற்றப்பட்டு வருகிறது. 
 கருமாத்தூர் கிராமத்தில் உள்ள கரிசல்பட்டி கண்மாயில் 22 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வி.பி.எம் பட்டாசு கம்பெனி பங்களிப்புடனும், வகுரணி பெரிய கண்மாயில் 20 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வெற்றி தியேட்டர் நிறுவனத்தினரின் பங்களிப்புடனும், அல்லிகுண்டம் கண்மாயில் 8 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை விக்னேஷ் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தினரின் பங்களிப்புடனும், சிறுபட்டி கண்மாய் 9 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வருவாய்த்துறை அலுவலர்களின் பங்களிப்புடனும், கீரிப்பட்டி கண்மாயில் 9 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை மண்வளம் டிரஸ்ட் நிறுவன பங்களிப்புடனும், பண்ணியான் கண்மாயில் 2 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வருவாய்த்துறை அலுவலர்களின் பங்களிப்புடனும் அகற்றப்பட்டு வருகிறது.
 மேலும் வாலாந்தூர் கண்மாயில் 29 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வருவாய்த்துறை அலுவலர்களின் பங்களிப்புடனும், இடுங்குளம், பெரிய இலுப்பை, அட்டைகுளம் கண்மாய்களில் 8 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வாகைகுளம் ஜே.சி.பி பங்களிப்புடனும், மாதரை கண்மாயில் 3 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை வணிகர் சங்கத்தின் பங்களிப்புடனும், சிக்கம்பட்டி கண்மாயில் 7 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை குண்டாறு பங்களிப்புடனும் ஆக மொத்தம் உசிலம்பட்டி வட்டத்தில் 117 ஹெக்டர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படும் பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.    ..2..
  இப்பணிகள் வருவாய்த்துறை, மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் சீமைக்கருவேல மரங்கள் வேருடன் அகற்றப்பட்டு வருகிறது.  பொதுமக்களுக்கு சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் மூலம் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, உசிலம்பட்டி வட்டாட்சியர் ரவி, ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசந்திரன் (செல்லம்பட்டி), இளங்கோவன் (உசிலம்பட்டி) மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago