தேவத்தூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தெய்வ சிலைகள் வழிபட்டால் மழை பெய்யும் என ஐதீகம்

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      ஆன்மிகம்
devathur old devotees 2017 4 13

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தேவத்தூரில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான தெய்வ சிலைகளை வழிபட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகமாக உள்ளதாக மூத்தோர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், தேவத்தூரில் மணிமேகலை இளங்கோ மேல்நிலைப்பள்ளி அருகில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான மாலைசாமி, பொம்மக்கா மற்றும் தாத்தையன் தெய்வ சிலைகள் உள்ளன. இத்தெய்வங்களை கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்த மக்கள் தைப்பூசம் மற்றும் தைப்பொங்கல் திருநாளில் வழிபாடு நடத்துவது வழக்கம்.

பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாத நிலையில் இருந்த இந்த தெய்வ சிலைகளை அப்பகுதியைச் சேர்ந்த கம்பளத்துநாயக்கர் சமூகத்தினர் கம்புந்தட்டைகளை கொண்டு கூரை அமைத்து, தற்போது வழிபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேவத்தூர் பூசாரிபட்டியைச் சேர்ந்த ஊர்நாயக்கர் தங்கராஜ் கூறியதாவது, நாங்கள் நான்கு தலைமுறைகளாக எங்கள் குல தெய்வங்களான மாலைச்சாமி, பொம்மக்கா மற்றும் தாத்தையன் ஆகிய தெய்வங்களை வழிபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல், தைப்பூசம் ஆகிய விழா நாட்களில் இனிப்பு பொங்கல் வைத்து வழிபடுவோம், புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மழை பெய்ய சிறப்பு வழிபாடுகள் நடத்துவோம் என கூறினார். அதன்படியே கடந்த காலங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கதது.


இதை ஷேர் செய்திடுங்கள்: