முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 1-ம் தேதி முதல் அமலாகிறது: ஜி.எஸ்.டி. துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல்

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி  - பாராளுமன்ற இரு அவைகளிலும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி) நிறைவேறிய நிலையில், அதன் திருத்த துணை மசோதாக்களுக்கு நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, மத்திய அரசு திட்டமிட்டபடி நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறை ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த உள்ளது.

நான்கு அடுக்குகளாக ...
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை  (ஜி.எஸ்.டி) பாராளுமன்ற லோக்சபையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்தார் மசோதா மீது விவாதம் நடந்த பின்னர் மசோதா ஏகமனதாக நிறைவேறியது. பின்னர் பாராளுமன்ற ராஜ்யசபையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.  ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி.யில் 5% 12% 18% 28% என நான்கு அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

4 துணை மசோதாக்கள் ...
இதுதொடர்பான மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த சட்டத்தை அமலாக்குவதற்கு ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்யப்பட்டு 4 துணை  மசோதாக்கள் நிதி மசோதாக்களாக அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது, மத்திய சரக்கு-சேவை வரி மசோதா (சி.ஜி.எஸ்.டி.), ஒருங்கிணைந்த சரக்கு-சேவை வரி மசோதா (ஐ.ஜி.எஸ்.டி.), யூனியன் பிரதேச சரக்கு-சேவை வரி மசோதா (யு.டி.ஜி.எஸ்.டி.) மற்றும் ஜி.எஸ்.டி.யால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் மசோதா என 4 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஜனாதிபதி ஒப்புதல்
இந்த துணை மசோதாக்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், 4 துணை திருத்த மசோதாக்களுக்கும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி மசோதா அமுலுக்கு வந்த பிறகு கறுப்புப்பணம், கள்ளச்சந்தை  ஒழிவதோடு மத்திய-மாநில அரசுகளின் வருமானமும் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்