Idhayam Matrimony

தேர்தல் கமிஷன் அறிவிப்பின் நம்பகத்தன்மை குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கேள்வி

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முடியுமா? என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பின் நம்பத்தன்மை குறித்து கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

கட்சிகள் புகார்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பிக்கைத்தன்மையற்றவை, அவற்றில் முறைகேடு செய்ய முடியும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கைவிட்டு விட்டு, பழையபடி ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.ஆனால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது என தேர்தல் கமிஷன் திட்டவட்டமாக கூறி வருகிறது.

தேர்தல் கமிஷன் சவால்
இப்போது இந்த விவகாரத்தில் தேர்தல் கமிஷன் பல தரப்பினருக்கும் பகிரங்க சவால் விட்டுள்ளது.மே முதல் வாரத்திலோ அல்லது முதல் 10 நாட்களிலோ வல்லுனர்கள், விஞ்ஞானிகள், தொழில் நுட்ப நிபுணர்கள் யார் வேண்டுமானாலும் வந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா என முயற்சி செய்து பார்க்கட்டும் என தேர்தல் கமிஷன் அதிரடியாக கூறி உள்ளது.

கெஜ்ரிவால் கேள்வி
ஆனால், தேர்தல் கமிஷனின் இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பதிவில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:- “ஏன் இது போன்ற செய்திகள் தகவல்கள் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது? இது எந்த அளவில் நம்பகமான தகவல்? தேர்தல் கமிஷன் ஏன் இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. நேற்று  (நேற்று முன்தினம்)மாலையில் இருந்து நான் தேர்தல் கமிஷனின் அறிவிப்பை பார்க்க முயன்று வருகிறேன். தேர்தல் கமிஷன் கூறியதாக தகவல் உண்மையானதுதானா?” இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்