முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தை தொழிலாளரை பணியில் அமர்த்தினால் சிறை: கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே எச்சரிக்கை

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை

குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவோருக்கு சிறை தண்டனையும், அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 14 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை தடை செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குடும்ப பாரம்பரிய தொழில்கள், சினிமா சீரியல், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்குசார்ந்த பணிகள் பிற விளையாட்டு துறைகளில் மட்டும் உரிய நிபந்தனைகுளுடன் 14 வயதுக்குட்பட்டவர்களை ஈடுபடுத்தவும் மற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை தடுக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. பாரம்பரிய தொழிலின் அடிப்படையை குழந்தைகள் அறிந்து ª கொள்ள விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும் குடும்ப பாரம்பரிய தொழிலாக அபாயகரமான தொழிலாக இருந்தால் தங்களுடைய குழந்தைகளை பணியில் ஈடுபடுத்தினால் பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்து ரூ. 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும் 16 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களை அபாயகரமான வேலைகள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்தும் பெற்றோருக்கு தண்டனை கிடையாது. ஆனால் இரண்டாவது முறையாகவோ அல்லது தொடர்ந்தோ ஈடுபடுத்தினால் அதிகபட்சமாக ரூ. 10 ஆயிரம் விதிக்கப்படும். முதன்முறையாக குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் குறைந்தபட்ச தண்டனையாக 3 மாதத்திலிருந்து 6 மாதமாகவும் அதிகபட்ச தண்டனையான 6 மாதத்திலிருந்து 2 ஆண்டுகளாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது. 2வது முறையாக குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தினால் 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை என்றிருந்ததை ஓராண்டு முதல் 3 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க குழந்தை மற்றும் வளர்இளம் பருவ தொழிலாளர் மறுவாழ்வு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago