முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் இஸ்ரேல் வருகை வரலாற்று விஜயமாக இருக்கும் : பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பெருமிதம்

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி வருகை புரிவது அந்நாட்டிற்கு வரலாற்று விஜயமாக இருக்கும் என்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ட்விட்டரில் கூறியுள்ளார்.

வரலாற்று விஜயம்
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: நண்பர் பிரதமர் மோடி இஸ்ரேஸ் வருகைக்காக இஸ்ரேலியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள். உங்களது வருகை இஸ்ரேலுக்கு வரலாற்று விஜயமாக இருக்கும்.  பிரதமர் மோடி ட்விட்டரில் எகிப்திய அடிமை தனத்தில் இருந்து இஸ்ரேலியர்கள் பறப்பதற்கான விழா என்று பாஸ்ஓவர் யூத திருவிழாவின் போது பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் பயணம்
கடந்த ஜனவரி 1992-ம் ஆண்டு முதல் இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் மேற்கொள்ளப்பட்டது. அது முதல் 25 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு நிலையான வளர்ச்சியில் உள்ளது. இருப்பினும் கடந்த காலங்களில் உயர்பொறுப்பு கொண்ட தலைவர்கள் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது இல்லை. ஆனால், பாரதீய ஜனதா தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுடனான உறவுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இஸ்ரேல் பயணம் மேற்கொண்டார். இஸ்ரேலுக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் பயணம் மேற்கொள்வது அதுதான் முதல் தடவையாக இருந்தது.

2-வது முறையாக...
இதன் பின்னர், இஸ்ரேல் அதிபர் இந்தியாவுக்கு கடந்த ஆண்டு வருகை தந்தார். 20 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இஸ்ரேல் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு வருகை தருவது இரண்டாவது தடவையாகும்.  இந்திய பிரதமர் மோடி- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்நாயுடு ஆகியோர் ஐநா தொடர்புடைய கூட்டங்களில் பல முறை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்