முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தலைவர் மாளிகையில் விழா: 2-ம் கட்டமாக பத்ம விருதுகளை பிரணாப்முகர்ஜி வழங்கினார்

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் நேற்று 2-ம் கட்டமாக பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி வழங்கினார்.

‘பத்ம’ விருதுகள்
ஒவ்வொரு ஆண்டும் கலை, சமூக சேவை, அறிவியல், வர்த்தகம், தொழில், மருத்துவம், பொதுவாழ்வு, ஆன்மிகம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி, சாதனை படைக்கிறவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவிக்கிறது. குடியரசு தின விழாவையொட்டி இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது மரபாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, ‘பத்ம’ விருதுகள் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது

பத்ம விபூஷண்
மிக உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 7 பேருக்கும், பத்ம பூஷண் விருது 7 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 75 பேருக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 89 பேர் விருதுப்பட்டியலில் இடம் பிடித்தனர்.  பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாசுக்கு (வயது 77) பத்ம விபூஷண் விருது  தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆன்மிகவாதியும், யோகா குருவும், ஈஷா அறக்கட்டளை நிறுவனருமான சத்குரு ஜக்கி வாசுதேவ்  முன்னாள் மத்திய அமைச்சர்கள் சரத் பவார், முரளி மனோகர் ஜோஷி, விண்வெளி விஞ்ஞானியும், யூ.ஆர்.ராவ். முன்னாள் முதல்-மந்திரி சுந்தர்லால் பட்வா,முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மா, ஆகியோருக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கபட்டது.

பத்ம பூஷண்
மறைந்த பத்திரிகையாளர் சோ ராமசாமி யுடன் விஸ்வமோகன் பட் (ராஜஸ்தான்), தேவி பிரசாத் திவிவேதி (உத்தரபிரதேசம்), தேஹம்டன் உத்வாடியா (மராட்டியம்), ரத்ன சுந்தர் மகாராஜ் (குஜராத்), நிரஞ்சன் நந்தா சரஸ்வதி (பீகார்), தாய்லாந்து இளவரசி மகாசக்ரி சிரிந்தோர்ன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.

பத்ம ஸ்ரீ விருது
மிருதங்க இசைக்கலைஞர் டி.கே. மூர்த்தி,வரலாற்று ஆசிரியர் மைக்கேல் டேனினோ, டாக்டர் சுனிதி சாலமன், ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கபட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த கதகளி நடனக்கலைஞர் செமஞ்சேரி குன்ஹிராமன் நாயர்,நடிகை பாரதி விஷ்ணுவர்த்தன் (கர்நாடகம்), 92 வயதான கர்நாடக இசைக்கலைஞர் பரசால பி. பொன்னம்மாள், தேசிய விருது பெற்ற சினிமா பின்னணி பாடகி அனுராதா பாத்வால் (மராட்டியம்), களரிபயட்டு தற்காப்பு கலை வீராங்கனை மீனாட்சியம்மா (கேரளா) ஆகியோருக்கும் பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கபட்டது.

பிரணாப் வழங்கினார்
இவர்களுக்கு ‘பத்ம’ விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று 2-ம் கட்டமாக நடைபெற்றது. விழாவில்  குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பத்ம விருதுகளை வழங்கினார். பத்திரிக்கையாளர் சோ சார்பில் அவரது மனைவி பத்ம பூஷன் விருதை பெற்று கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்