முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி ராஜோரிகார்டன் இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - டெல்லி ராஜோரிகார்டன் இடைத்தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி டெபாசிட் இழந்தது. காங்கிரஸ் கட்சிக்கு 2-ம் இடம் கிடைத்தது.

இடைத்தேர்தல்
டெல்லியில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 தொகுதிகளில் வெற்றி  பெற்று ஆட்சி அமைத்தது.  இதற்கிடையில், அண்மையில் நடந்த பஞ்சாப் சட்ட மன்றதேர்தலில் போட்டியிடுவதற்காக டெல்லி ராஜோரிகார்டன் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏவான ஜர்னயில் சிங் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.  இதையடுத்து இந்த தொகுதிக்கு ஏப்ரல் 9-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

கடும் போட்டி
இந்த தொகுதியில் ஆளும் ஆத்மி கட்சி, பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. விரைவில் டெல்லியில் நகராட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலின் முடிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

பா.ஜ.க வெற்றி
தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை வகித்த பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர்  மஜிந்தர் சிங் சிர்ஷா 14,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  காங்கிரஸ் 2-ஆம் இடம் பெற்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி 10 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்ததுடன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்