முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட இந்தியர்கள் மீட்பு : சுஷ்மா ஸ்வராஜ் தகவல்

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட 10 இந்தியர்களும் மீட்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

10 பேரும் மீட்பு
சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட மாலுமிகள் உள்ளிட்ட 10 இந்தியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.  சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடந்த வாரம் கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த கப்பல் மற்றும் அதிலிருந்த மாலுமிகள் உள்ளிட்ட 10 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். இந்நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு அந்த கப்பலை சோமாலிய பாதுகாப்புப் படை அதிகாரிகள் 3 நாட்களுக்கு முன் மீட்டனர்.  அதன் தொடர்ச்சியாக, சோமாலிய கடற்கொள்ளையர்களின் பிடியில் இருந்த இந்தியர்கள் 10 பேரும் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நன்றி தெரிவித்தார்
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, எம்.வி.ஏஎல் குஷார் கப்பலில் பயணம் செய்த போது கடத்தப்பட்ட 10 இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்பதற்கு உறுதுணையாக இருந்த சோமாலிய அரசு மற்றும் கால்முடக் மாநில அதிகாரிகள் மற்றும் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கென்யாவிற்கான இந்திய உயர் ஆணையர் சுசித்ரா துரையின் முயற்சிக்கு, சுஷ்மா  பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தொடர் அச்சுறுத்தல்
5 வருடங்களுக்கு பிறகு சோமாலிய கிளர்ச்சியாளர்கள், கடந்த சில வாரங்களாக மீண்டும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. சேமாலியாவின் கடற்கொள்ளையர்கள் உலக கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறத்தலாக இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்