முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவை பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

கட்சிகள் எதிர்ப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகள் நம்பகத்தன்மையற்றவை, அவற்றில் முறைகேடு செய்ய முடியும் என்ற குரல் ஓங்கி ஒலிக்க தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரகளை கைவிட்டு விட்டு பழையபடி வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

குற்றச்சாட்டு
உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி படுதோல்வியை தழுவியது. 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட முறைகேடு தான் இதற்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டி இருந்தார். இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்த்து பகுஜன் சமாஜ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று வழக்கு தொடர்ந்தது.

உத்தரவு
இது தொடர்பாக மத்திய அரசு, தேர்தல் ஆணையம் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மே 8-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அன்று இந்த வழக்கின் விசாரணை நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்