முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்பேத்காரின் 126- வது பிறந்தாள்: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி - பிரதமர் மோடி மரியாதை

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மலர்தூவி மரியாதை

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் 126-வது பிறந்தநாள் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி பாராளுமன்ற வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், பாபாசாகேப் அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி  அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரார்த்தனை

அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி நேற்று நாக்பூர் சென்றார். பின் அம்பேத்கர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் புத்தமதத்தை தழுவிய புனித தலமான தீக்‌ஷ பூமியில் மோடி பிரார்த்தனை செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்