முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் பற்றாக்குறைக்கு மாற்று ஏற்பாடு ரூ.25 கோடி கேட்டு மாநகராட்சி கருத்துரு

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      ஈரோடு

மாநகராட்சி பகுதிக்கு, காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. காவிரி நீர் பற்றாக்குறையின்போது, குடிநீர் பிரச்னையை சமாளிக்க, 25 கோடி வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.இதுபற்றி, ஈரோடு மாநகராட்சி ஆணையர் சீனி அஜ்மல்கான் கூறியதாவது காவிரி ஆற்றில் குடிநீருக்காக தண்ணீர் திறக்கப்படுவதாலும், தடுப்பணைகளில் நீர் தேக்கி குடிநீராக சப்ளை செய்வதாலும், தற்போது வரை மாநகராட்சி பகுதியில் பெரிய அளவில் பிரச்னை இல்லை. மாநகரின் பிரதான பகுதியில், மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், புறநகர் பகுதியில், நான்கு நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கினோம். அதே நிலை தற்போதும் தொடர்கிறது. காவிரியில், 100 கன அடி நீருக்கு மேல் வருவதால், வழக்கம்போல, மாநகராட்சி பகுதிக்கு தினமும், 55 மில்லியன் லிட்டர் தண்ணீர் மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. மேட்டூர் நீர் இருப்புப்படி, இன்னும் ஒரு மாதத்துக்கு மேல் தண்ணீர் கிடைக்கும். இருப்பினும், பற்றாக்குறை ஏற்பட்டால், உடனடியாக, தலா, 10 லட்சம் ரூபாய்க்கு குடிநீர் வழங்கும் வகையில் அவ்வப்போது டெண்டர் விட்டு, தொடர்ந்து தண்ணீர் வினியோகிக்கப்படும். இதற்காக அரசிடம் இருந்து, 25 கோடி ரூபாய் நிதி கேட்டு, கருத்துரு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்