முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம்: மக்கள் நலக் கூட்டணி பங்கேற்பு

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      அரசியல்
Image Unavailable

சென்னை, விவசாயிகள் பிரச்சனைக்காக திமுக நாளை  கூட்டும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தலின் போது பிரமாண்டமாக தோற்றமளித்தது மக்கள் நலக் கூட்டணி. தற்போது இதில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தே.மு.தி.க, த.மா.கா, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கட்சிகள் வரிசையாக வெளியேறிவிட்டன. இதனிடையே அண்மைக்காலமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனுடன், திருமாவளவன் மற்றும் முத்தரசன் கைகோர்த்து செயல்பட்டு வருகின்றனர்.சென்னையில் ரஜினிகாந்த் விவகாரம் தொடர்பாக மூவரும் கூட்டாகவும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தனர்.

இதனிடையே டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்காக நாளை  திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பாஜக மற்றும் அதிமுகவின் இரு அணிகளுக்கும் திமுக அழைப்பு அனுப்பவில்லை. இதர கட்சிகள் அனைத்துக்கும் திமுக நிர்வாகிகள் நேரில் சென்று அழைப்பு கொடுத்து வருகின்றனர். இதனிடையே திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி பங்கேற்கும் என்று திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago