முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வரும் பணி: கலெக்டர் மு.ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      நாமக்கல்
Image Unavailable

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் நகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் பேரூராட்சித்துறையின் சார்பில் வறட்சி - குடிநீர் தேவைகளை நிறைவேற்றுவதற்காக மோகனூர் அருகே காவிரி ஆற்றில் கூடுதலாக நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு நீர் எடுக்கப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வு இன்று (14.04.2017) நடைபெற்றது. மாவட்ட ஆட்சிதலைவர் மு.ஆசியா மரியம் வறட்சி - குடிநீர் பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.நாமக்கல் நகராட்சி, மோகனூர் பேரூராட்சியின் சார்பில் மோகனூர்- வாங்கலுக்கிடைப்பட்ட காவிரி ஆற்றில் நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைத்து குழாய்கள் வழியாக நீர் ஏற்று நிலையம் மூலம் தொட்டிகளில் நிரப்பி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதையும், அதனைத்தொடர்ந்து மோகனூர் ஒருவந்தூருக்குட்பட்ட காவிரி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணறுகளோடு தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக கூடுதலாக நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு சேந்தமங்கலம் பேரூராட்சி மற்றும் காளப்பநாய்க்கன்பட்டி ஆகிய பேரூராட்சி பகுதிகளிலுள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரும் பணிகளையும் கலெக்டர் மு.ஆசியா மரியம் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியால் நீர் நிலைகள் வற்றி வறண்டு போய் உள்ள சூழ்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான குடிநீர் தேவைகளை நிறைவேற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. நீர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு இருக்கின்ற நீரை பொதுமக்களுக்கு தடையின்றி பிரித்து வழங்குவதோடு, பொதுமக்களும் குடிநீரை மிக சிக்கனமாக பயன்படுத்திட வேண்டுமென துறை அலுவலர்கள் எடுத்துக்கூறி இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்திட வேண்டுமென கலெக்டர் மு.ஆசியா மரியம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் ம.ராஜசேகரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் செல்வதுரை, உதவி செயற்பொறியாளர் என்.ஆர்.தங்கவேல், நாமக்கல் நகராட்சிப்பொறியாளர் எஸ்.கமலநாதன், மோகனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மோகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago