எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையில்
ஓரணியில் திரள எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. மேலும் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதிய ஜனாதிபதி
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வுக்கு எளிது
ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி ஜனாதிபதியை பா.ஜ.க. மிக எளிதாக தேர்வு செய்யும் நிலையில் உள்ளது. எனவே யாரை ஜனாதிபதி ஆக்கலாம் என்று பிரதமர் மோடியும், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தன்னிச்சையாக தேர்வு ...
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் அல்லது பெண் ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட கூடும் என்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கவும் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபைகளிலும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் துணை ஜனாதிபதியையும் பா.ஜ.க. தன்னிச்சையாக தேர்வு செய்யும் நிலையில் உள்ளது.
தோற்கடிக்க திட்டம்
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கி உள்ளன. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பேச்சுவார்த்தை
இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தைகளின்படி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் ஒன்று திரள உள்ளன. கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் மற்றும் வட கிழக்கு மாநில கட்சிகள் இஸ்லாமிய கட்சிகளையும் இந்த அணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
பொது வேட்பாளரை ...
எதிர்க்கட்சிகள் சார்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பொது வேட்பாளர் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் ஒருமித்த தேர்வாக இருப்பார் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக மாறும் நிலை உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அருணாச்சலில் சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு
25 Apr 2024திபெங், அருணாச்சல பிரதேச, சீன எல்லையை ஒட்டிய நெடுஞ்சாலையில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
25 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் வரும் 28-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.