முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மார்ட் கார்டு திட்டத்தினால் பொதுமக்களின் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது: அதிமுக எம்எல்ஏ பன்னீர்செல்வம் பேச்சு

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினால் முறைகேடுகள் தவிர்க்கபட்டு தமிழக மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யப்படுகிறது என அதிமுக எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தொகுதியில் இயங்கி வரும் 99 நியாயவிலை கடைகள் மூலமாக பயன்பெறும் அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் 7320 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னனு அட்டைகளை வழங்கினார்.அப்பபோது அவர் பேசியதாவது,அறிவியல் வளர்ச்சிக்கேற்ப பொது விநியோக திட்டத்தில் முறைகேடுகளை தவிர்ப்பதற்க்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழகம் முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அறிவித்தார். அதனடிப்படையிலே சுமார் 350கோடி செலவில் கடந்த ஏப்ரல் 1ம்தேதி இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 1கோடியே 89லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு படிப்படியாக முன்று மாதங்களில் தமிழகத்தில் இயங்கி வரும் 34,840 கூட்டுறவு நியாயவிலை கடைகள் மூலமாக வழங்கப்படும்.இந்த ஸ்மார்ட் கார்டுகள் திட்டத்தை மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவங்குவதற்கு காரணம், பொதுமக்களின் நலனுக்கா அரசின் சார்பில் மான்ய விலையில் வழங்கப்படும் அரசி உள்ளிட்ட அத்தியவசிய பொருட்கள் ஏக்காரணத்தை கொண்டும் மூலம் திருட்டு கார்டுகள், போலி அட்டைகள் மூலமாக வெளியே செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு இத்திட்டத்தை அவர் செயல்படுத்தினார்.தற்போது ஜெயலலிதாவின் கனவு திட்டம் நிறைவேறியுள்ளது, மேலும் பொதுமக்களின் உணவு பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுவரை 5.85கோடி நபர்கள் தங்களுடைய ஆதார் விவரங்களை குடும்ப அட்டையுடன் இணைத்துள்ளதாக தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் கலசபாக்கம் ஓன்றிய அதிமுக செயலாளர் என்.திருநாவக்கரசு, மாவட்ட வேளாண் பொறியியல் சங்கத்தலைவர் எல்.என்.துரை, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பெய்யாமொழி, ஓன்றிய குழு துணைத்தலைவர் கருணாமூர்த்தி, ஓன்றிய இளைஞரணி துணை செயலாளர் சக்தி, குப்பம் ஊராட்சிமன்றதலைவர் மனோகரன் உட்பட கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்