முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விசைபம்பு அமைக்கும் பணி ராமநாதபுரம் கலெக்டர் முனைவர் நடராஜன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 14 ஏப்ரல் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் விசைப்பம்பு அமைக்கும் பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரில் ஆய்வு செய்தார்.
 ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது நிலவும் வறட்சியான காலக்கட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ராமநாதபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப்பணிகளை கலெக்டர் முனைவர் நடராஜன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 தற்போது நிலவும் வறட்சியான காலக்கட்டத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக குடிநீர் விநியோகம் சீரான முறையில் மேற்கொள்ள போர்;க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தற்போது ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட 20 வார்டுகளில் தலா ஒரு சிறு மின்விசைப்பம்பு வீதம் மொத்தம் ரூ.34 லட்சம் மதிப்பில் விசைப்பம்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இவற்றின் மூலம் நாளொன்றுக்கு சுமார் 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
 ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நொச்சிவயல் ஊரணி, முகவை ஊரணி, லெட்சுமிபுரம் ஊரணிகளில் உள்ள நீர் உறிஞ்சு கிணறுகள் புனரமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  இவற்றின் மூலம் 2,3,4,32,9,10,11 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் சுமார் 18ஆயிரம் நபர்கள் பயன்பெறுவார்கள். இந்நகரில் மொத்தம் 120 அடிபம்புகள் இயக்கப்படுகிறது.  இவற்றில் பழுது ஏற்பட்டால் உடனுக்குடன் சரி செய்ய உதிரி பாகங்கள் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் வாங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் இதுவரை அடிபம்புகள்; உடனுக்குடன் சரி செய்யப்பட்டுள்ளது. நகர் பகுதியில் சுற்றியுள்ள உள்@ர் ஆதாரங்கள் கண்டறியப்பட்டு, புனரமைக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 இதன்படி இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் அ.அப்துல் ரஷீத், பொறியாளர் பி.நடராஜன், உதவிப் பொறியாளர் ம.சுப்பிரமணியபிரபு, நகரமைப்பு ஆய்வாளர் இ.ஹபீப்ரஹ்மான் உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago