முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரதிராஜா என்னை சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ள மாட்டார்: ரஜினிகாந்த் வருத்தம்

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையத்தை நடிகர் ரஜினி, கமல் துவக்கிவைத்தனர்.

திரைக்கலையின் தன்மையை மீண்டும் விரிவுப்படுத்தி அதன் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொடுக்க "பாரதிராஜாவின் உலகளாவிய திரைப்பட பயிற்சி நிலையம்" எனும் புதிய திரைப்பட கல்வி நிலையத்தை துவங்கியுள்ளார்.

இந்த திரைப்பட பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல், பாக்கியராஜ், சுந்தர்.சி, நாசர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பயிற்சி நிறுவனத்தை திறந்து வைத்த நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, எவ்வுளவு சிறப்பாக நடித்தாலும் பாரதிராஜாவிடம் இருந்து வாழ்த்துக்களை பெற முடியாது. அவர் என்னை சிறந்த நடிகர் என்று ஒத்துக்கொள்ளவே மாட்டார். அவருக்கு என்னை பிடிக்கும், ஆனால் பிடிக்காது என்றும் கூறினார். அவரது திரைப்பட கல்வி நிலையத்தில் மாணவர்கள் பங்கேற்று கலைத்துறைக்கு பெருமை சேர்க்க வேண்டும் இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

முன்னோட்ட திரையரங்கத்தை திறந்து வைத்த நடிகர் கமலஹாசன் பேசியதாவது, ஒருவன் எவ்வளவு மோசடாக நடித்தாலும், பாரதிராஜாவிடம் பயிற்சி பெற்றால் சிறந்த கலைஞனாக உருவாக முடியும். தனக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பது தான் ஒரு சிறந்த ஆசிரியரின் கடமை. அந்த வகையில் பாரதிராஜா ஒரு முனிவராக காட்சியளிக்கிறார் என்று கமல் கூறினார்.

நடிகர் நாசர் பேசிய போது, தற்போதைய காலகட்டத்தில் சினிமாவில் தொழில்நுட்ப ஈடுபாடு அதிகமாகியிருப்பதால், கலை அதன் தன்மையை இழந்து வருகிறது. பாரதிராஜாவின் கல்வி நிலையம் மூலம் கலைத்தன்மை மீண்டும் மேன்மை அடையும் என்று தான் நம்புகிறேன் என்று பேசினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் மணிரத்னம், கவிஞர் வைரமுத்து, நடிகை ராதிகா சரத்குமார், நடிகை சுஹாசினி மணிரத்னம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago