முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர்

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி - வெற்று பாத்திரங்கள் அதிக சத்தம் ஏற்படுத்துவது போல பாகிஸ்தான் சர்ச்சைகளால் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுவதாக மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் கடற்படை கமாண்டர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தானில் வேவு பார்த்ததாக அந்நாடு மரண தண்டனை விதித்துள்ளது. இது இருநாட்டு உறவிலும் மேலும் விரிசல் ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தான் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர்.  இது குறித்து அவர் கூறியதாவது: பாகிஸ்தான் எப்போதுமே தன்னை ஏதாவது ஒரு சர்ச்சையின் வாயிலாக சர்வதேச அரங்கில் முன்னிறுத்திக் கொள்ள விரும்புகிறது. இந்தி, கொங்கனி மொழிகளில் ஒரு சொலவடை உண்டு. 'வெற்று பாத்திரம் அதிக சத்தம் ஏற்படுத்தும்' என்பர். அதுபோலத்தான் பாகிஸ்தானும். பாகிஸ்தான் சொல்வதையெல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.

சர்ச்சைகளை உருவாக்கி தனக்கு அடையாளம் தேடும் பாகிஸ்தானின் முயற்சி அபாயகரமானது என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். பாகிஸ்தானின் இத்தகைய சீண்டல்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்தால் அவர்களால் தாங்கமுடியாது. ஆனால், இந்தியா அமைதியை விரும்புகிறது. பதற்றமான சூழலைத் தவிர்க்கவே நாம் விரும்புகிறோம். பாகிஸ்தான், ஜாதவை நம்மிடம் ஒப்படைப்பதே அவர்களுக்கு நல்லது. இதே கருத்தை நமது வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் ஏற்கெனவே தெரிவித்துவிட்டார். இவ்வாறு டிடி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாரிக்கர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago