முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியர் மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் : பாகிஸ்தானுக்கு இந்திய தூதரகம் தகவல்

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - பாகிஸ்தானில் குல்பூஷன் ஜாதவ் என்ற இந்தியருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, இந்தியா மேல்முறையீடு செய்யவுள்ளதாக அந்நாட்டு இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. ஜாதவை விடுதலை செய்ய அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தூக்கு தண்டனை விதித்தது.

இந்தியாவைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அவருக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பாகிஸ்தானின் இந்த செயல் இந்தியாவில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் திரு.கவுதம் பம்பாவாலே நேற்று பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளரை சந்தித்து, இந்த தண்டனைக் எதிராக இந்தியா மேல்முறையீடு செய்யும் என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். குல்பூஷன் எங்கு வைக்கப்பட்டி ருக்கிறார் என்பதை தெரிவிக்குமாறு இந்திய தூதரகம் பலமுறை கோரியும், பாகிஸ்தான் அரசு பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.

மேல் முறையீடு
மேலும், குல்பூஷனுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நகலையும் அளிக்க மறுத்து வருகிறது. மேல் முறையீடு செய்வதற்கு குற்றப்பத்திரிகை விவரம் தேவைப்படுவதால், அதனைப் பெறுவதற்கு இந்திய தூதரகம் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago