முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று ஈஸ்டர் தினம்: ஜனாதிபதி வாழ்த்து

சனிக்கிழமை, 15 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,  இன்று ஈஸ்டர் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் வெறுப்புத்தன்மையை மக்கள் அடியோடு ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்று ஈஸ்டர் பண்டிக்கை உலகம் முழுவதும் குறிப்பாக கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்தவாழ்த்து செய்தியில் வெறுப்புத்தன்மையை மக்கள் அடியோடு ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்தாண்டு ஈஸ்டர் தினமானது புத்துயிரூட்ட வேண்டிய  நேரத்தில் ஈஸ்டர் பண்டிகை வந்துள்ளது சிறப்பாகும். உண்மையான வாழ்கை வாழ்வதற்கும் அன்புடன் இருப்பதற்கும் சகிப்புத்தன்னை மற்றும் மன்னிப்பு உணர்வுடன் இருப்பதற்கும் தன்னலமற்ற வாழ்க்கை வாழ்வதற்கும்  ஏசு பிரான் நமக்கு போதித்துள்ள போதனைகள் எப்போதும் உந்துசக்தியாக  இருக்கிறது.

சமுதாயத்தில் இருந்து வெறுப்புத்தன்மையையும் வன்முறையையும் ஒழிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து பாடுபடுவோம். சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கும் அனாதை, ஏழைகளுக்காக தம் வாழ்வை அர்ப்பணிப்போம். இந்த நல்ல நேரத்தில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு குறிப்பாக கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு என் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முகர்ஜி மேலும் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்