முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவகல்லூரியில் சேர நீட் தேர்வுக்கு 12 மாநிலங்கள் 4 யூனியன் பிரதேசம் ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : மருத்துவகல்லூரிகளில் சேர நீட் தேர்வு கட்டாய  முறைக்கு 12-க்கும் மேலான மாநிலங்களும் 4 யூனியன் பிரதேசங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவத்துறையில் குறைபாடுகளை போக்கவும் தரமானதாக்கவும் ஆலோசனை கூற கடந்தாண்டு மத்திய அரசானது  ஒரு உயர்மட்டக்கமிட்டி அமைத்தது. இந்த கமிட்டியானது பல சிபாரிசுகளை செய்தது. அதன்படி மருத்துக்கல்லூரிகளில் சேர நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு (தேசிய நுழைவு தேர்வு- நீட்) இருக்க வேண்டும் என்றும் மருத்துவக்கல்லூரிகளை கண்காணிக்கும் இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்தவ கவுன்சில் ஆகியவைகளை நீக்கிவிடவும் அந்த கமிட்டி சிபாரிசு செய்தது. அதன்படி 2016-ம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மருத்துவகல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு(எம்.பி.பி.எஸ். மற்றும் மருத்துவ மேற்படிப்பு (எ.எஸ். மற்றும் எம்.டி.) ஆகிய படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்பதற்கு பீகார், ஜார்க்கண்ட், சட்டீஷ்கர், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், இமாசலப்பிரதேசம், அரியானா, மேகலாயா, ஒடிசா, கேரளா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும், சண்டிகார்,டெல்லி,அந்தமான் நிகோபர், புதுச்சேரி ஆகிய யூனியன் பிரதேசங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆந்திரா, கர்நாடகம்,மேற்குவங்கம், அசாம், கோவா, தெலுங்கானா, ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட்  ஆகிய 9 மாநிலங்கள் நீட் தேர்வு தேவையில்லை என்று கூறியுள்ளன.  நீட் தேர்வை ஆதரிக்கும்படி மாநில அரசுகளையும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மருத்துவக்கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரி வருகிறது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago