முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படத்தின் வசூலை விவசாயிகளுக்கு சமர்ப்பிக்கும் தப்பாட்டம் படக்குழு

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      சினிமா
Image Unavailable

விவசாயத்தை காப்பாற்றுவதற்காக டெல்லியில் விவசாயிகள் பல நாட்களாக போராடி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் ‘தப்பாட்டம்’ படக்குழுவினரும் ஆதரவு குரல் கொடுத்துள்ளனர்.‘நீரின்றி அமையாது உலகு.. உழவனே.. நீ இன்றியும் அமையாது உலகு..

தாய்ப்பால் துளி மட்டும் என்னை வளர்க்கவில்லை..உழவனே உன் வியர்வை துளியின்றி மனித இனத்திற்கு உணவில்லை..!இன்று நிர்வாணமாக தெருவில் நிற்கிறாய்.. நீ மனம் துடித்து தமிழனாய் உலக அரங்கில் அவமானத்துடன் செய்வதறியாது தவிக்கிறேன்.. நான்..! உழவனே..

இதுவரை உண்பதை மட்டுமே சிந்தித்தேன் உன்னை... சிந்திக்கவில்லை மன்னித்து விடு இனி உயிர் இருக்கும் வரை உன் நினைவிருக்கும்..!மே 15ம் தேதி வெளியாகும் மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான "தப்பாட்டம்" திரைப்படத்தின் மொத்த வசூலையும் தமிழக விவசாயிகளின் பொற்பாதங்களில் குற்ற உணர்ச்சியுடன் சமர்ப்பிப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

‘தப்பாட்டம்’ படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விவரம் கதையின் நாயகன் : துரை சுதாகர்கதையின் நாயகி: டோனாஇசையமைப்பாளர் : பழநி பாலுஒளிப்பதிவாளர்: ராஜன்பாடலாசிரியர்: விக்டர் தாஸ், கார்த்திக் & பாலுசண்டைப்பயிற்சி: ஆக்சன் பிரகாஷ் மக்கள் தொடர்பு : இரா.குமரேசன்,கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் : முஜிபூர் ரஹ்மான் தயாரிப்பு : ஆதம் பாவா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்