முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேஸிங்கில் தடுமாறும் ஐதராபாத் அணி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      விளையாட்டு
Image Unavailable

புனே : ஐ.பி.எல். சீசன் 10-வது டி-20 லீக் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு சாம்பியனான ஐதராபாத் அணி சேஸிங்கில் திணறி வருகிறது. இந்த வருடமும் முத்திரை பதிக்க சேஸிங்கில் கவனம் செலுத்துவது முக்கியமானது.

2 முறைதான் ...

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஐதராபாத் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்ய கொல்கத்தா அணி 172 ரன்கள் குவித்தது. பின்னர் களம் இறங்கிய ஐதராபாத் அணியால் 155 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி பெரிய சேஸிங் ஸ்கோரை அதிக அளவில் எட்டியது கிடையாது. எதிரணி 170 ரன்களுக்கு மேல் வெற்றி இலக்கை நிர்ணயத்ததில் இதுவரை இரண்டு முறையாதான் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

வாய்ப்பு உள்ளது

2014 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 186 ரன்னை சேஸிங் செய்துள்ளது. 2016-ல் மொகாலியில் நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 180 ரன்களை சேஸிங் செய்துள்ளது. நேற்று முன்தினம் 172 ரன்னை சேஸிங் செய்ய முடியாமல் தோல்வியை சந்தித்தது. தற்போது ஐதராபாத் அணி 4 போட்டிகளில் முடிவில் தலா 2 வெற்றி தோல்விகளை பெற்றுள்ளார். வரும் போட்டிகளில் சேஸிங்கில் அதிக கவனம் செலுத்தினால், அந்த அணி முதல் நான்கு இடத்திற்குள் வர வாய்ப்பிருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago