முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் நகரில் மதுரை தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் ஆய்வு கூட்டம்:

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-மதுரை தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் ஆய்வுக் கூட்டம் திருமங்கலம் நகரில் சிறப்பாக நடைபெற்றது.இவ்விழாவில் ம.தி.மு.க பொருளாளர்,முன்னாள் எம்.பி., அ.கணேசமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மதுரை தெற்கு மாவட்ட ம.தி.மு.க செயல்வீரர்கள் ஆய்வுக் கூட்டம் திருமங்கலம் நகர் சக்தி மீட்டிங் ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.இக் கூட்டத்திற்கு மாநில விவசாயஅணி துணைச் செயலாளர் ஜெ.சக்திவேல் தலைமை வகித்தார்.திருமங்கலம் நகர ம.தி.மு.க செயலாளர் அனிதா.வி.பால்ராஜ் வரவேற்று பேசினார்.மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் அ.கதிரேசன்,மாவட்ட துணைச் செயலாளர் புஷ்பலதா சீனிவாசன்,ஒன்றிய செயலாளர் தர்மராஜ்,மேற்கு ஒன்றிய செயலாளர் சிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சி நிர்வாகிகள் மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ம.தி.மு.க பொருளாளர் முன்னாள் எம்.பி., அ.கணேசமூர்த்தி கலந்து கொண்டு கட்சியை வலுப்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.பின்னர் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ம.தி.மு.க சார்பில் சீமைக்கருவேல் மரங்களை அகற்றிடும் பணிகளை மேற்கொள்வது,மதுரை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,அதிகளவு உறுப்பினர்களை சேர்த்து புதிய கிளைகளை அமைத்து கழக கொடியேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் மாநில கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம்,மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் மார்நாடு,மாநில தொண்டரணி அமைப்பாளர் பாஸ்கரசேதுபதி, மாநில தொழிலாளர் அணிச் செயலாளர் மகபூப்ஜான்,மாநில விவசாய அணிச் செயலாளர் முனியாண்டி,மாநில மாணவரணி துணைச் செயலாளர் கயேசன்,மாவட்ட மகளிரணி தலைவி பேச்சியம்மாள்,வழக்கறிஞர் நடராஜன்,பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வபாண்டி, பஞ்சுராஜன்,ஜவஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தின் நிறைவில் திருமங்கலம் நகர் அவைத்தலைவர் வி.திருப்பதி நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்