முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புலனாய்வு அமைப்புகளுக்கு பார்லி.குழு கடும் கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : பதன்கோட், உரி போன்ற இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் மீது பாராளுமன்ற குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு புலனாய்வு அமைப்புகளின் குறைபாடுகளே காரணமாகும் என்றும் பாராளுமன்ற குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

கடந்தாண்டு பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டியுள்ள பதன்கோட் விமான நிலையும் மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரியில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் நாட்டின் பல இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 17 வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தினர்.

பாராளுமன்ற நிலைக்குழு:

உள்துறை விவகாரத்திற்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இருக்கிறார். அவர் தலைமையிலான இந்த கமிட்டி கூறுகையில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதுகுறித்து இந்திய புலனாய்வு அமைப்பானது இன்னும் விசாரணையை நடத்தி முடிக்கவில்லை. மேலும் பதன்கோட், உரி, பம்போரே பாரமுல்லா, நகடோ ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை முன்கூட்டியே கண்டுபிடித்து தாக்குதலை தடுக்க தவறியதற்கான காரணம் குறித்தும் தாக்குதலுக்கான ஆதாரங்கள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் தேசிய புலனாய்வு அமைப்பு இதுவரை கூறவில்லை என்றும் நிலைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கு காரணம் நமது தேசிய புலனாய்வு அமைப்புகளின் குறைபாடுகளே காரணமாகும் என்றும் குழு தெரிவித்துள்ளது.

தாக்குதல்கள்:-

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதன்கோட் விமானப்படை விமான தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 வீரர்கள் வீரமரணமடைந்தனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உரி ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 19 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

கடந்தாண்டு ஜூன் மாதம் 16-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் நெடுஞ்சாலையில் மத்திய ரிசர்வ் படையினர் சென்ற வாகனத்தின் மீது பாம்போரே என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 வீரர்கள் பலியானார்கள். கடந்தாண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பாரமுல்லா மாவட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் வீரமரணமடைந்தார். அதே மாவட்டத்தில் கடந்தாண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நாக்ரோடா என்ற இடத்தில் இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

விரைவான விசாரணை:-

இந்த தாக்குதல் குறித்த விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்று தேசிய புலனாய்வு அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட வேண்டும். அப்போதுதான் அந்த பகுதிகளில் உள்ள புலனாய்வு அமைப்புகளிடத்தில் இருக்கும் குறைபாடுகள் குறித்து கண்டறிந்து அதை போக்க நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் குழு தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபகாலமாக தீவிரவாதிகள் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இதற்கான காரணத்தை அறிய விசாரணையை மத்திய உள்துறை அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும். தீவிரவாதிகள் ஊடுருவ வசதியாக இருக்கும் இடங்களை கண்காணித்து அந்த இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் குழு கேட்டுக்கொண்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு எல்லைக்கட்டுப்பாடு கோடு நெடுகிலும் கடந்தாண்டு 364 ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது. இதில் 112 தடவை தீவிரவாதிகள் ஊடுருவல் செய்துள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டு ஊடுருவல் முயற்சி 121 தடவைகள் நடந்துள்ளன. இதில் 33 தடைவை தீவிரவாதிகள் ஊடுருவல் செய்துள்ளனர் என்றும் குழு தெரிவித்துள்ளது.

சுரங்கப்பாதை:-

எல்லை நெடுகிலும் சுரங்கப்பாதைகள் அமைத்து அதன் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலும் அதிகரித்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் இதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கப்பாதை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மத்திய உள்துறை அமைச்சகமானது புதிய தொழில்நுட்ப முறையை கையாண்டு தடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இந்தமாதிரி சுரங்கப்பாதை வழியாக ஊடுருவலை தடுக்க பல்வேறு வழிகளில் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஊடுருவலை தடுத்து வருகின்றனர். அதுகுறித்தும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆராய வேண்டும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு ஆலோசனை கூறியுள்ளது.        

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago